திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1177

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொங்கீன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னிபொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்அங்குச பாச மெனுமகி லங்கனிதங்கு மவள்மனை தானறி வாயே.

உரை

பாடல் #1176 இல் உள்ளபடி இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்திருக்கின்ற இறைவியானவளின் திரு உருவத்தைத் தமக்குள் அறிந்து உணர்ந்து கொள்வதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். நறுமணத்தைத் தருகின்ற வாசனை மிக்க மலர்கள் பூத்திருக்கும் செடியின் கொம்பு போன்ற மெல்லிய இடையுடனும், மலரின் அரும்பு போன்ற மென்மையான முலைகளுடனும், என்றும் இளமையுடன் இருக்கின்ற இறைவியானவள், சாதகருக்குள்ளிருந்து பொங்கி வெளிப்படும் குங்குமம் போன்ற சிவந்த ஒளி வீசும் திரு உருவத்தைக் கொண்டவள். அவளது திருக்கைகளில் அங்குசத்தையும் பாசக் கயிற்றையும் ஏந்திக் கொண்டு, அடியவர்களின் உலகப் பற்றை அடக்கி ஆளுகின்றாள். அனைத்து உலகங்களிலும் அன்போடு வீற்றிருக்கின்ற அவள் தங்கியிருக்கும் வீடாகிய சாதகரின் உடலுக்குள் தாமாகவே தேடி அறிந்து கொள்ளுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1176 இல் உள்ளபடி இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்திருக்கின்ற இறைவியானவள், நறுமணத்தைத் தருகின்ற வாசனை மிக்க மலர்கள் பூத்திருக்கும் செடியின் கொம்பு போன்ற மெல்லிய இடையுடையவள்.

  • வரி 2

    மலரின் அரும்பு போன்ற மென்மையான முலைகளுடனும், என்றும் இளமையுடன் இருக்கின்ற இறைவியானவள், சாதகருக்குள்ளிருந்து பொங்கி வெளிப்படும் குங்குமம் போன்ற சிவந்த ஒளி வீசும் திரு உருவத்தைக் கொண்டவள்.

  • வரி 3

    அவளது திருக்கைகளில் அங்குசத்தையும் பாசக் கயிற்றையும் ஏந்திக் கொண்டு, அடியவர்களின் உலகப் பற்றை அடக்கி ஆளுகின்றாள்.

  • வரி 4

    அனைத்து உலகங்களிலும் அன்போடு வீற்றிருக்கின்ற அவள் தங்கியிருக்கும் வீடாகிய சாதகரின் உடலுக்குள் தாமாகவே தேடி அறிந்து கொள்ளுங்கள்.

திருமந்திரம் பாடல் #1177

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout