திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1176

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்அத்துவ மாயல்ல வாய சகலத்தள்வைத்த பராபர னாய பராபரைசத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

உரை

பாடல் #1175 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்ட இறைவி எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். மூன்று வகை முத்திரைகளைத் தன் வசம் வைத்திருக்கும் உண்மையான ஞானத்தை உடையவளான இறைவி, அந்த முத்திரைகளின் தத்துவங்களாகவும், தத்துவங்கள் இல்லாததாகவும், அனைத்துமாகவும் அவளே இருக்கின்றாள். சாதகருக்குள் இருக்கும் பரம்பொருளாகிய இறைவனாகவே இருந்து இயங்குகின்ற பராசக்தியான இறைவி, பேரின்பத்தைக் கொடுக்கின்ற சக்தியான இறைவனோடு, பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்திருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1175 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்ட இறைவி, மூன்று வகை முத்திரைகளைத் தன் வசம் வைத்திருக்கும் உண்மையான ஞானத்தை உடையவள்.

  • வரி 2

    அவள் அந்த முத்திரைகளின் தத்துவங்களாகவும், தத்துவங்கள் இல்லாததாகவும் இருக்கின்றாள்.

  • வரி 3

    அனைத்துமாகவும் அவளே இருக்கின்றாள்.

  • வரி 4

    சாதகருக்குள் இருக்கும் பரம்பொருளாகிய இறைவனாகவே இருந்து இயங்குகின்ற பராசக்தியான இறைவி, பேரின்பத்தைக் கொடுக்கின்ற சக்தியான இறைவனோடு, பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்திருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1176

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout