திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1175

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தக்க பராவித்தை தானிரு பத்தேழில்தக்கெழு மோருத்தி ரஞ்சொல்லச் சொல்லவேமிக்கிடு மென்சக்தி வெண்ணிற முக்கண்ணிதொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.

உரை

பாடல் #1174 இல் உள்ளபடி ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாதவள் என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்ற பராசக்தியின் பேரறிவைக் கொடுக்கும் தத்துவமானது, தானாகவே இருபத்தேழு விதமான தத்துவங்களாக இருக்கின்றது. இந்தத் தத்துவங்களைப் பெற்றுப் பேரறிவைப் பெறுவதற்கு ஏற்றதாகச் சாதகரின் உள்ளுக்குள்ளிருந்து எழுகின்ற ஒரு மந்திரத்தை அவர் திரும்பத் திரும்பச் செபித்துத் தியானித்துக் கொண்டே இருந்தால், அவருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்டு எழுகின்ற இறைவியானவள் வெண்ணிறத்துடனும் மூன்று கண்களுடனும் கதை ஆயுதத்தை ஏந்திக் கொண்டும், ஆதி முத்திரையைக் காட்டிக் கொண்டும் இருப்பாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1174 இல் உள்ளபடி ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாதவள் என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்ற பராசக்தியின் பேரறிவைக் கொடுக்கும் தத்துவமானது, தானாகவே இருபத்தேழு விதமான தத்துவங்களாக இருக்கின்றது.

  • வரி 2

    இந்தத் தத்துவங்களைப் பெற்றுப் பேரறிவைப் பெறுவதற்கு ஏற்றதாகச் சாதகரின் உள்ளுக்குள்ளிருந்து எழுகின்ற ஒரு மந்திரத்தை அவர் திரும்பத் திரும்பச் செபித்துத் தியானித்துக் கொண்டே இருந்தால்,

  • வரி 3

    அவருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்டு எழுகின்ற இறைவியானவள் வெண்ணிறத்துடனும் மூன்று கண்களுடனும் கதை ஆயுதத்தை ஏந்திக் கொண்டு இருப்பாள்.

  • வரி 4

    ஆதி முத்திரையைக் காட்டிக் கொண்டும் இருப்பாள்.

திருமந்திரம் பாடல் #1175

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout