திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1174

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசைதானான வாறுமீ ரேழும் சமைகலைதானான விந்து சகமே பரமெனுந்தானாம் பரவா தனையெனத் தக்கதே.

உரை

பாடல் #1173 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்ட இறைவி எப்படி இருக்கின்றாள், என்ன செய்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். தனக்கென்று ஒரு ஆரம்பமும் இல்லாமல் தானாகவே இருக்கின்ற வழிமுறைப்படி, இறைவியானவள் எட்டுவிதமான சக்திகளாக (பாடல் #1084 இல் காண்க) சாதகருக்குள்ளும் பதினான்கு உலகங்களிலும் சரிசமமாக உருவாக்கிச் செயல்படுத்துகின்றாள். அவளே உள்ளுக்குள் இருக்கும் ஒளி வடிவான இறைவியாகவும், அனைத்தையும் இயக்குகின்ற சக்தி வடிவம் என்று உணரப்படுகின்ற இறைவனாகவும் இருக்கின்றாள். இந்த இறைவியானவள் ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத அளவு என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1173 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்ட இறைவி, தனக்கென்று ஒரு ஆரம்பமும் இல்லாமல் தானாகவே இருக்கின்ற வழிமுறைப்படி,

  • வரி 2

    எட்டுவிதமான சக்திகளாக (பாடல் #1084 இல் காண்க) சாதகருக்குள்ளும் பதினான்கு உலகங்களிலும் சரிசமமாக உருவாக்கிச் செயல்படுத்துகின்றாள்.

  • வரி 3

    அவளே உள்ளுக்குள் இருக்கும் ஒளி வடிவான இறைவியாகவும், அனைத்தையும் இயக்குகின்ற சக்தி வடிவம் என்று உணரப்படுகின்ற இறைவனாகவும் இருக்கின்றாள்.

  • வரி 4

    இந்த இறைவியானவள் ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத அளவு என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1174

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout