திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1173

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுறவார்ந்தெழு மாயையு மந்தம தாய்நிற்கும்ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

உரை

பாடல் #1172 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட யோக ஒளியானது, அதற்கும் மேலான அக்னியாக இருக்கும் இறைவனின் ஒளி உருவத்தோடு சேர்ந்து பரவும் போது, அந்தப் பக்குவப்பட்ட சாதகரின் உள்ளிருந்து வெளிப்படுகின்ற அனைத்து விதமான மாயைகளையும் இறைவனின் அக்னி உருவமே சுட்டு எரித்து அழித்துவிடுகின்றது. அதன் பிறகு, உத்வேகத்துடன் சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற வெளிச்சமும் சத்தமும் மிகவும் உச்ச நிலையை அடையும் போது, அதிலிருந்து மிகுதியாக வெளிப்படுகின்றாள், அடியவர்களின் எண்ணத்தைத் தம்மேல் இழுக்கின்ற அழகிய வளையல்களை அணிந்த இறைவி.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1172 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட யோக ஒளியானது, அதற்கும் மேலான அக்னியாக இருக்கும் இறைவனின் ஒளி உருவத்தோடு சேர்ந்து பரவும்.

  • வரி 2

    அப்போது, அந்தப் பக்குவப்பட்ட சாதகரின் உள்ளிருந்து வெளிப்படுகின்ற அனைத்து விதமான மாயைகளையும் இறைவனின் அக்னி உருவமே சுட்டு எரித்து அழித்துவிடுகின்றது.

  • வரி 3

    அதன் பிறகு, உத்வேகத்துடன் சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற வெளிச்சமும் சத்தமும் மிகவும் உச்ச நிலையை அடையும்.

  • வரி 4

    அதிலிருந்து மிகுதியாக வெளிப்படுகின்றாள், அடியவர்களின் எண்ணத்தைத் தம்மேல் இழுக்கின்ற அழகிய வளையல்களை அணிந்த இறைவி.

திருமந்திரம் பாடல் #1173

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout