திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1172

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

யோகநற் சத்தி யொளிபீடந் தானாகும்யோகநற் சத்தி யொளிமுகந் தெற்காகும்யோகநற் சத்தி யுதர நடுவாகும்யோகநற் சத்திதா ளுத்தரந் தேரே.

உரை

பாடல் #1171 இல் உள்ளபடி ஆயுழி எனும் மாபெரும் யோகத்தில் இருக்கும் போது, அதிலிருந்து அனைத்திற்கும் நன்மை தருவதற்கு வெளிப்படும் சக்தியின் ஒளி உருவத்தைத் தாங்குகின்ற பீடமாகச் சாதகரின் உடலே இருக்கின்றது. அந்த சக்தியின் ஒளியானது தெற்குத் திசையை நோக்கிப் பரவிக் கொண்டிருக்கின்றது. அந்த சக்தியின் ஒளி சாதகரின் வயிற்றின் நடுப்பகுதியிலிருந்து வெளிப்படுகின்றது. இந்தச் சக்தியாக வெளிப்படும் இறைவியின் திருவடிகளே அனைத்திற்கும் மேலானது என்பதை உங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1171 இல் உள்ளபடி ஆயுழி எனும் மாபெரும் யோகத்தில் இருக்கும் போது, அதிலிருந்து அனைத்திற்கும் நன்மை தருவதற்கு வெளிப்படும் சக்தியின் ஒளி உருவத்தைத் தாங்குகின்ற பீடமாகச் சாதகரின் உடலே இருக்கின்றது.

  • வரி 2

    அந்த சக்தியின் ஒளியானது தெற்குத் திசையை நோக்கிப் பரவிக் கொண்டிருக்கின்றது.

  • வரி 3

    அந்த சக்தியின் ஒளி சாதகரின் வயிற்றின் நடுப்பகுதியிலிருந்து வெளிப்படுகின்றது.

  • வரி 4

    இந்தச் சக்தியாக வெளிப்படும் இறைவியின் திருவடிகளே அனைத்திற்கும் மேலானது என்பதை உங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

திருமந்திரம் பாடல் #1172

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout