திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1171

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இதுவப் பெருந்தகை யெம்பெரு மானும்பொதுவக் கலவியும் போகமு மாகிமதுவக் குழலி மனோன்மணி மங்கைஅதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

உரை

பாடல் #1170 இல் உள்ளபடி ஒரே பொருளாக இருக்கின்ற எமக்குள், மிகவும் பெருமையை உடைய எமது தலைவனாகிய இறைவனும் யாமும் ஒன்றாகக் கலந்திருக்கின்ற நிலையிலும், அதனால் கிடைக்கின்ற பேரின்பத்திலும் இருக்கும் போது, மாயையாகிய மயக்கத்தை அளித்துத் தம்மை நாடும் அடியவர்களைக் கவர்ந்திழுக்கும், நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலையுடைய மனோன்மணியாகிய என்றும் இளமையான இறைவியும் எம்மோடு கலந்து ஒரே பொருளாக இருக்கும் விதத்தை, எமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்வது ஆயுழி எனும் மாபெரும் யோகமாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1170 இல் உள்ளபடி ஒரே பொருளாக இருக்கின்ற எமக்குள், மிகவும் பெருமையை உடைய எமது தலைவனாகிய இறைவனும் யாமும் ஒன்றாகக் கலந்திருக்கின்ற நிலையிலும், அதனால் கிடைக்கின்ற பேரின்பத்திலும் இருக்கும் போது,

  • வரி 2

    மாயையாகிய மயக்கத்தை அளித்துத் தம்மை நாடும் அடியவர்களைக் கவர்ந்திழுக்கும் இறைவியும் அப்போது நிற்கின்றாள்.

  • வரி 3

    நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலையுடைய மனோன்மணியாகிய என்றும் இளமையான இறைவியும் எம்மோடு கலந்து ஒரே பொருளாக இருக்கின்றாள்.

  • வரி 4

    இந்த நிலையை எமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்வது ஆயுழி எனும் மாபெரும் யோகமாகும்.

திருமந்திரம் பாடல் #1171

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout