திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1170

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உணர்ந்துல கேழையும் யோகினி சத்திஉணர்ந்துயி ராய்நிற்கும் உன்னத னீசன்புணர்ந்தொரு காலத்துப் போகம தாகிஇணைந்து பரமென் றிசைந்திது தானே.

உரை

பாடல் #1169 இல் உள்ளபடி பலவிதமான திருக்கோலங்களில் எமக்குள்ளே உணர்ந்த பராசக்தியாகிய இறைவியே, இறைவனை உணர்வதற்கு உயிர்கள் பிறவி எடுக்கும் ஏழு உலகங்களிலும், இறைவனை அறிவதற்காகச் செய்யும் யோகங்களுக்கெல்லாம் தலையான சக்தியாக இருக்கின்றாள். எமது உயிருக்கு உயிராக எம்மோடு கலந்திருக்கும் உன்னதமான இறைவனை யாம் உணர்ந்து, அவருடன் கலந்து பல காலம் இருந்து உச்ச நிலையை அடைந்த ஒரு சமயத்தில், பேரின்பத்தை யாம் பெற்று அனுபவித்தோம். அப்போது எம்மோடு கலந்திருக்கும் இறைவனோடு, ஏழு உலகங்களிலும் பரவியிருக்கும் பராசக்தியாகிய இறைவியும் கலந்து, பரம்பொருள் ஆகி நின்று, இறைவன் இறைவி யாம் என்கிற தனித்தன்மைகள் இல்லாமல் ஒரே பொருளாகி இருக்கின்றோம்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1169 இல் உள்ளபடி பலவிதமான திருக்கோலங்களில் எமக்குள்ளே உணர்ந்த பராசக்தியாகிய இறைவியே, இறைவனை உணர்வதற்கு உயிர்கள் பிறவி எடுக்கும் ஏழு உலகங்களிலும், இறைவனை அறிவதற்காகச் செய்யும் யோகங்களுக்கெல்லாம் தலையான சக்தியாக இருக்கின்றாள்.

  • வரி 2

    எமது உயிருக்கு உயிராக எம்மோடு கலந்திருக்கும் உன்னதமான இறைவனை யாம் உணர்ந்தோம்.

  • வரி 3

    அவருடன் கலந்து பல காலம் இருந்து உச்ச நிலையை அடைந்த ஒரு சமயத்தில், பேரின்பத்தை யாம் பெற்று அனுபவித்தோம்.

  • வரி 4

    அப்போது எம்மோடு கலந்திருக்கும் இறைவனோடு, ஏழு உலகங்களிலும் பரவியிருக்கும் பராசக்தியாகிய இறைவியும் கலந்து, பரம்பொருள் ஆகி நின்று, இறைவன் இறைவி யாம் என்கிற தனித்தன்மைகள் இல்லாமல் ஒரே பொருளாகி இருக்கின்றோம்.

திருமந்திரம் பாடல் #1170

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout