திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1169

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பராசத்தி யென்றென்று பல்வகை யாலுந்தராசத்தி யான தலைப்பிர மாணிஇராசத்தி யாமள வாகமத் தாளாகுங்குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

உரை

பாடல் #1168 இல் உள்ளபடி பராசக்தியாகவே ஆகிவிடுகின்ற சாதகர், அந்தப் பராசக்தியின் பலவித அம்சங்களில் பல வகையான உலக இயக்கங்களைச் செய்து கொண்டிருக்கும் போது, அவருக்கு அருளைத் தருகின்ற சக்தியாக இருப்பது, அனைத்திற்கும் தலையான பிரம்மம் என்று உணரப்படும் இறைவியாகும். இந்த இறைவியே இராசத்தி என்று யாமள ஆகமத்தில் அழைக்கப்படுகிறாள். குருவாக வந்து அருளுகின்ற இவளது பலவிதமான திருக்கோலங்களை, யாம் எமக்குள்ளே தரிசித்து உணர்ந்து கொண்டோம்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1168 இல் உள்ளபடி பராசக்தியாகவே ஆகிவிடுகின்ற சாதகர், அந்தப் பராசக்தியின் பலவித அம்சங்களில் பல வகையான உலக இயக்கங்களைச் செய்து கொண்டிருக்கும்.

  • வரி 2

    அப்போது அவருக்கு அருளைத் தருகின்ற சக்தியாக இருப்பது, அனைத்திற்கும் தலையான பிரம்மம் என்று உணரப்படும் இறைவியாகும்.

  • வரி 3

    இந்த இறைவியே இராசத்தி என்று யாமள ஆகமத்தில் அழைக்கப்படுகிறாள்.

  • வரி 4

    குருவாக வந்து அருளுகின்ற இவளது பலவிதமான திருக்கோலங்களை, யாம் எமக்குள்ளே தரிசித்து உணர்ந்து கொண்டோம்.

திருமந்திரம் பாடல் #1169

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout