திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1168

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்பன்னி யிருப்பப் பராசக்தி யாமே.

உரை

பாடல் #1167 இல் உள்ளபடி அனைவரும் வணங்கும் அளவிற்கு என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியால் அருளப்பட்ட சாதகர், பேரொளியாக இருக்கும் இறைவியிடமிருந்தே, எவ்வாறு சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று இரவில் நிலா பிரகாசிக்கிறதோ, அது போலவே, இறைவியாகிய அருட் பேரொளியிடமிருந்து தாம் ஒளியாகிய அருளைப் பெறுவார். அந்த அருள் நிரப்பப்பட்டதால், மாளிகை போல இருக்கும் தமது உடல் முழுவதும் அருள் நிறைந்திருக்கும். அதன் பிறகு, தமது தலை உச்சியில் உள்ள சகஸ்ரதள ஜோதியோடு உடல் முழுவதும் உள்ள பதினாறு கலைகளையும் (பாடல் #713 இல் காண்க) ஒன்று சேர்த்து, தமக்குள் இருக்கும் அருளைக் கொண்டு அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டே இருப்பதால், ஆதிப் பரம்பொருளான பராசக்தியாகவே சாதகர் ஆகிவிடுவார்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1167 இல் உள்ளபடி அனைவரும் வணங்கும் அளவிற்கு என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியால் அருளப்பட்ட சாதகர்,

  • வரி 2

    பேரொளியாக இருக்கும் இறைவியிடமிருந்தே, எவ்வாறு சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று இரவில் நிலா பிரகாசிக்கிறதோ, அது போலவே ஒளியாகிய அருளைப் பெறுவார்.

  • வரி 3

    அந்த அருள் நிரப்பப்பட்டதால், மாளிகை போல இருக்கும் தமது உடல் முழுவதும் அருள் நிறைந்திருக்கும்.

  • வரி 4

    தமது தலை உச்சியில் உள்ள சகஸ்ரதள ஜோதியோடு உடல் முழுவதும் உள்ள பதினாறு கலைகளையும் (பாடல் #713 இல் காண்க) ஒன்று சேர்த்து, அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டே இருப்பதால், ஆதிப் பரம்பொருளான பராசக்தியாகவே சாதகர் ஆகிவிடுவார்.

திருமந்திரம் பாடல் #1168

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout