தொடர்ந்து படிக்கread this section continuously
கண்டெண் திசையுங் கலந்து வருங்கன்னிபண்டெண் திசையும் பராசக்தி யாய்நிற்கும்விண்டெண் திசையும் விரைமலர் கைக்கொண்டுதொண்டெண் திசையுந் தொழநின்ற கன்னியே.
உரைmeaning
பாடல் #1166 இல் உள்ளபடி ஞானத்தால் தரிசனம் செய்து கொண்டே இருக்கின்ற சாதகர்களோடு எட்டுத் திசைகளிலும் கூடவே சேர்ந்து வருகின்ற, என்றும் இளமையான கன்னியாகிய இறைவியானவள், ஆதியிலிருந்தே எட்டுத் திசைகளிலும் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டு வீற்றிருக்கின்றாள். இதைச் செய்து கொண்டு, விண்ணகத்தில் இருக்கும் இறைவியின் நிலையை அடைந்த சாதகர்களை, எட்டுத் திசையிலும் இருக்கின்ற உயிர்கள் நறுமணம் வீசும் மலர்கள் தூவி அர்ச்சித்து, தொண்டு செய்து, எட்டுத் திசையெங்கும் அவர்களை வணங்கி நிற்கும்படி அருளுகின்றாள், என்றும் இளமையான இறைவி.
As in verse #1166, the Goddess, the ever-youthful maiden who accompanies, in all eight directions, the sadhakas who go on beholding her through wisdom, has stood from the very beginning setting in motion all the worlds present in the eight directions. Doing this, the ever-youthful Goddess also grants that the sadhakas who have attained the Goddess's own state in the heavens be worshipped by the beings present in all eight directions, who scatter fragrant flowers and offer service, standing in worship of them from every one of the eight directions.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1166 இல் உள்ளபடி ஞானத்தால் தரிசனம் செய்து கொண்டே இருக்கின்ற சாதகர்களோடு எட்டுத் திசைகளிலும் கூடவே சேர்ந்து வருகின்ற, என்றும் இளமையான கன்னியாகிய இறைவியானவள்,
As in verse #1166, the Goddess, the ever-youthful maiden who accompanies, in all eight directions, the sadhakas who go on beholding her through wisdom,
- வரி 2Line 2
ஆதியிலிருந்தே எட்டுத் திசைகளிலும் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டு வீற்றிருக்கின்றாள்.
has stood from the very beginning setting in motion all the worlds present in the eight directions.
- வரி 3Line 3
இதைச் செய்து கொண்டு, விண்ணகத்தில் இருக்கும் இறைவியின் நிலையை அடைந்த சாதகர்களை, எட்டுத் திசையிலும் இருக்கின்ற உயிர்கள் நறுமணம் வீசும் மலர்கள் தூவி அர்ச்சித்து, தொண்டு செய்யும்படி அருளுகின்றாள்.
Doing this, she also grants that the sadhakas who have attained the Goddess's own state in the heavens be worshipped by the beings present in all eight directions, who scatter fragrant flowers and offer service.
- வரி 4Line 4
எட்டுத் திசையெங்கும் அவர்களை வணங்கி நிற்கும்படி அருளுகின்றாள், என்றும் இளமையான இறைவி.
She grants that they stand in worship of them from every one of the eight directions, the ever-youthful Goddess.
திருமந்திரம் பாடல் #1167





