திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1166

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்மண்ணுடை யாரை மனிதரிற் கூட்டொணாப்பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்விண்ணுடை யார்களை மேலுறைக் கண்டே.

உரை

பாடல் #1165 இல் உள்ளபடி அனைத்தையும் தனது அருட் பார்வையினால் செயல்படுத்துகின்ற இறைவியோடு சேர்ந்து, அவளிருக்கும் இடத்திலேயே வீற்றிருக்கும் பேறு பெற்ற சாதகர்கள், மண்ணுலகத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களோடு ஒன்றாகச் சேர்ந்திராமல் தனித்திருந்து, உண்மை ஞானத்தை உணர்ந்த பண்பைக் கொண்டவர்களாக இருப்பதால், மண்ணுலகத்தில் நிகழும் எதனாலும் பாதிக்கப்படாமல், விண்ணுலகத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்ட தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரை தமது ஞானத்தால் கண்டு கொண்டே இருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1165 இல் உள்ளபடி அனைத்தையும் தனது அருட் பார்வையினால் செயல்படுத்துகின்ற இறைவியோடு சேர்ந்து, அவளிருக்கும் இடத்திலேயே வீற்றிருக்கும் பேறு பெற்ற சாதகர்கள்,

  • வரி 2

    மண்ணுலகத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களோடு ஒன்றாகச் சேர்ந்திராமல் தனித்திருக்கின்றார்கள்.

  • வரி 3

    உண்மை ஞானத்தை உணர்ந்த பண்பைக் கொண்டவர்களாக இருப்பதால், மண்ணுலகத்தில் நிகழும் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.

  • வரி 4

    விண்ணுலகத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்ட தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரை தமது ஞானத்தால் கண்டு கொண்டே இருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1166

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout