திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1165

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

உரை

பாடல் #1164 இல் உள்ளபடி மனோன்மணி எனும் சிவசக்தியே இருநிலமான மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டையும் தாங்கி, அண்ட சராசரங்களில் விரிந்திருக்கும் ஆகாயமாகவும், உயிர்களுக்கு வெப்பத்தைத் தருகின்ற நெருப்பாகவும், உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் தருகின்ற சூரியனாகவும், இரவில் குளிர்ச்சியான ஒளியைத் தருகின்ற நிலவாகவும், மழையைப் பொழிய வைக்கின்ற மேகங்களாகவும், உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கும் மலைகளாகவும், குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கும் கடல்களாகவும் இருந்து, அனைத்தையும் தனது அருட் பார்வையினாலேயே செயல்படுத்துகின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1164 இல் உள்ளபடி மனோன்மணி எனும் சிவசக்தியே இருநிலமான மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டையும் தாங்கி, அண்ட சராசரங்களில் விரிந்திருக்கும் ஆகாயமாக நிற்கின்றாள்.

  • வரி 2

    உயிர்களுக்கு வெப்பத்தைத் தருகின்ற நெருப்பாகவும், உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் தருகின்ற சூரியனாகவும், இரவில் குளிர்ச்சியான ஒளியைத் தருகின்ற நிலவாகவும் இருக்கின்றாள்.

  • வரி 3

    மழையைப் பொழிய வைக்கின்ற மேகங்களாகவும் நிற்கின்றாள்.

  • வரி 4

    உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கும் மலைகளாகவும், குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கும் கடல்களாகவும் இருந்து, அனைத்தையும் தனது அருட் பார்வையினாலேயே செயல்படுத்துகின்றாள்.

திருமந்திரம் பாடல் #1165

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout