திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1164

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ்சொல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகிமல்லவொண் ணாத மனோன்மணி தானே.

உரை

வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாத அரும்பெரும் ஜோதியாக இருக்கும் இறைவனிடமிருந்து வெளிப்படும் கனிந்த நெருப்புத் தணல் பொதிந்துள்ள பரவெளி மண்டலத்தில், பாடல் #1163 இல் உள்ளபடி இறைவியின் நிலையை அடைந்த சாதகர்கள், அந்தத் தணலின் வெப்பத்தை அனுபவித்துச் சொல்ல முடியாத திகைப்பில் அங்கேயே இருப்பார்கள். அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களும் இயங்குவதற்குக் காரணமாகவும், எளிதில் வெல்ல முடியாததாகவும் இருக்கும் வினைகளைத் தனித்திருந்து ஆளுகின்ற பெருந்தலைவியாகிய இறைவியே, எளிதில் அடைய முடியாத மனோன்மணி எனும் சிவசக்தியாக இருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாத அரும்பெரும் ஜோதியாக இருக்கும் இறைவனிடமிருந்து வெளிப்படும் கனிந்த நெருப்புத் தணல் பொதிந்துள்ள பரவெளி மண்டலம்,

  • வரி 2

    பாடல் #1163 இல் உள்ளபடி இறைவியின் நிலையை அடைந்த சாதகர்கள், அந்தத் தணலின் வெப்பத்தை அனுபவித்துச் சொல்ல முடியாத திகைப்பில் அங்கேயே இருப்பார்கள்.

  • வரி 3

    அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களும் இயங்குவதற்குக் காரணமாகவும், எளிதில் வெல்ல முடியாததாகவும் இருக்கும் வினைகளைத் தனித்திருந்து ஆளுகின்ற பெருந்தலைவியாகிய இறைவியே,

  • வரி 4

    எளிதில் அடைய முடியாத மனோன்மணி எனும் சிவசக்தியாக இருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1164

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout