தொடர்ந்து படிக்கread this section continuously
உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடுகந்துநின் றான்நம் உழைபுக நோக்கிஉகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே.
உரைmeaning
பாடல் #1161 இல் உள்ளபடி, இறைவியோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்கும் சாதகன், தன் சாதகத்தில் முழுமையை அடைந்தபின், தன் ஆக்ஞா சக்கரத்தில் ஒளி பொருந்திய நெற்றிக் கண்ணாக இருக்கும் பேரறிவு ஞானத்தைப் பெறுகிறான். அந்தப் பேரறிவு ஞானத்தைச் சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலருக்குள் புகுந்து செல்லும்படி செலுத்தி, அண்ட சராசரத்தில் இருக்கும் அனைத்து உலகங்களையும் தாங்கியிருக்கும் இறைவியின் தோளோடு தன் தோளையும் சேர்த்துத் தாங்கி நிற்கிறான்.
As in verse 1161, the seeker who stands merged with the goddess, reveling in supreme bliss, upon reaching completeness in his practice, receives the great wisdom that becomes a luminous forehead-eye in his Agna chakra. Directing that great wisdom to enter into the thousand-petalled lotus in the Sahasradala, he joins his own shoulder with the shoulder of the goddess, who bears up all the worlds and the moving and unmoving things in the universe, and stands upholding them together with her.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1161 இல் உள்ளபடி, இறைவியோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்கும் சாதகன், தன் சாதகத்தில் முழுமையை அடைந்தபின்,
As in verse 1161, the seeker who stands merged with the goddess, reveling in supreme bliss, upon reaching completeness in his practice,
- வரி 2Line 2
தன் ஆக்ஞா சக்கரத்தில் ஒளி பொருந்திய நெற்றிக் கண்ணாக இருக்கும் பேரறிவு ஞானத்தைப் பெறுகிறான்.
receives the great wisdom that becomes a luminous forehead-eye in his Agna chakra.
- வரி 3Line 3
அந்தப் பேரறிவு ஞானத்தைச் சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலருக்குள் புகுந்து செல்லும்படி செலுத்துகிறான்.
He directs that great wisdom to enter into the thousand-petalled lotus in the Sahasradala.
- வரி 4Line 4
அண்ட சராசரத்தில் இருக்கும் அனைத்து உலகங்களையும் தாங்கியிருக்கும் இறைவியின் தோளோடு தன் தோளையும் சேர்த்துத் தாங்கி நிற்கிறான்.
He joins his own shoulder with the shoulder of the goddess, who bears up all the worlds and the moving and unmoving things in the universe, and stands upholding them together with her.
திருமந்திரம் பாடல் #1162





