திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1161

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆலிக்குங் கன்னி யரிவை மனோன்மணிபாலித் துலகிற் பரந்துபெண்ணா ணாகும்வேலைத் தலைவியை வேத முதல்வியைஆலித்து ஒருவ னுகந்துநின் றானே.

உரை

பாடல் #1160 இல் உள்ளபடி, சாதகரின் உள்ளத்திற்குள் புகுந்து பேரின்பத்தில் வீற்றிருக்கும் இறைவி, என்றும் இளமையுடன் இறைவனோடு சேர்ந்திருக்கும் மனோன்மணியானவள், தன்னுடைய பெண் தன்மையில் இறைவனின் ஆண் தன்மையையும் சேர்த்து, உலகங்கள் அனைத்திற்கும் பரவிநின்று அருள் பாலிக்கிறாள். உலக இயக்கத்திற்குத் தலைவியாகவும், வேதங்களின் தலைவியாகவும், இறைவனோடு கலந்துநின்று அருள்புரியும் இவளது விதத்தைத் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்துகொண்ட சாதகர்கள், அவளுடன் சேர்ந்து தாமும் பேரின்பத்தில் திளைத்திருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1160 இல் உள்ளபடி, சாதகரின் உள்ளத்திற்குள் புகுந்து பேரின்பத்தில் வீற்றிருக்கும் இறைவி, என்றும் இளமையுடன் இறைவனோடு சேர்ந்திருக்கும் மனோன்மணியானவள்,

  • வரி 2

    தன்னுடைய பெண் தன்மையில் இறைவனின் ஆண் தன்மையையும் சேர்த்து, உலகங்கள் அனைத்திற்கும் பரவிநின்று அருள் பாலிக்கிறாள்.

  • வரி 3

    உலக இயக்கத்திற்குத் தலைவியாகவும், வேதங்களின் தலைவியாகவும், இறைவனோடு கலந்துநின்று அருள்புரியும் இவளது விதத்தைத் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்துகொண்ட சாதகர்கள்,

  • வரி 4

    அவளுடன் சேர்ந்து தாமும் பேரின்பத்தில் திளைத்திருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1161

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout