தொடர்ந்து படிக்கread this section continuously
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகைமாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்காச்சற்ற சோதி கடவுளுடன் புணர்ந்தாச்சற்று எனுள்புகுந் தாலிக்குந் தானே.
உரைmeaning
பாடல் #1159 இல் உள்ளபடி, பேச்சற்ற மோன நிலையில் இறைவனை நோக்கிச் செல்லும் சாதகர்கள், நன்மை தரும் பெரும் பொருளாகிய இறைவனைத் தமக்குள் தரிசித்த பெருமைக்கு உரியவர்கள். மாசு மருவில்லாத சோதி வடிவில், மனோன்மணி என்னும் பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருக்கும் இறைவி, மாசற்ற சோதியான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து பூரண சக்தியாகி, குற்றம் குறையில்லாத அந்த சாதகர்களின் உள்ளத்திற்குள் புகுந்து, பேரின்பத்தில் அவர்களுடன் வீற்றிருப்பாள்.
As in verse 1159, seekers who proceed toward the Lord in a wordless state of stillness are entitled to the honor of having beheld within themselves the Lord, the great and beneficent reality. The goddess, forever youthful in her feminine nature called Manonmani, in a form of light free of all blemish, joins as one with the Lord, who is a light free of all blemish, becoming the full power, and enters into the hearts of those seekers who are without fault or flaw, and dwells there with them in supreme bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1159 இல் உள்ளபடி, பேச்சற்ற மோன நிலையில் இறைவனை நோக்கிச் செல்லும் சாதகர்கள், நன்மை தரும் பெரும் பொருளாகிய இறைவனைத் தமக்குள் தரிசித்த பெருமைக்கு உரியவர்கள்.
As in verse 1159, seekers who proceed toward the Lord in a wordless state of stillness are entitled to the honor of having beheld within themselves the Lord, the great and beneficent reality.
- வரி 2Line 2
மாசு மருவில்லாத சோதி வடிவில், மனோன்மணி என்னும் பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருக்கும் இறைவி,
The goddess, forever youthful in her feminine nature called Manonmani, in a form of light free of all blemish,
- வரி 3Line 3
மாசற்ற சோதியான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து பூரண சக்தியாகிறாள்.
joins as one with the Lord, who is a light free of all blemish, becoming the full power.
- வரி 4Line 4
குற்றம் குறையில்லாத அந்த சாதகர்களின் உள்ளத்திற்குள் புகுந்து, பேரின்பத்தில் அவர்களுடன் வீற்றிருப்பாள்.
She enters into the hearts of those seekers who are without fault or flaw, and dwells there with them in supreme bliss.
திருமந்திரம் பாடல் #1160





