தொடர்ந்து படிக்கread this section continuously
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமைபெண்ணிடை யாணும் பிறந்து கிடந்ததுபெண்ணுடை யாணென் பிறப்பறிந் தீர்க்கின்றபெண்ணுடை யாணிடைப் பேச்சற்ற வாறே.
உரைmeaning
பெண்ணாகப் பிறக்கும் ஓர் உயிருக்குள் பெண் தன்மை மட்டுமே இருக்கும் என்று நினைப்பது அறியாமையாகும். பெண் பாலாகப் பிறக்கும் உயிருக்குள் பாதி ஆண் தன்மையும் சேர்ந்தே பிறக்கிறது; அதுபோலவே ஆண் பாலாகப் பிறக்கும் உயிருக்குள் பாதி பெண் தன்மையும் சேர்ந்தே பிறக்கிறது. பாடல் #1157 இல் உள்ளபடி இறைவி தனது பெண் தன்மையிலேயே இறைவனின் ஆண் தன்மையையும் கொண்டிருக்கிறாள் என்பதையும், பாடல் #1158 இல் உள்ளபடி இறைவனும் தனது ஆண் தன்மையிலேயே இறைவியின் பெண் தன்மையையும் கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்துகொண்ட சாதகர்கள், தமது பிறவியிலேயே இவ்விரு தன்மைகளும் தம்மோடு சேர்ந்தே பிறப்பதை முழுவதும் அறிந்துகொண்டு, அதிலேயே மனம் லயித்துச் சாதகம் செய்தால், பேச்சற்ற மோன நிலையில் இறைவனை நோக்கிச் செல்வார்கள்.
It is ignorance to think that a life born as a woman holds within it only the nature of a woman. Within a life born in female form, half of a male nature is also born along with it; in the same way, within a life born in male form, half of a female nature is also born along with it. Seekers who come to know that the goddess, as in verse 1157, holds within her own female nature the male nature of the Lord too, and that the Lord, as in verse 1158, holds within his own male nature the female nature of the goddess too, and who thereby fully realize that both these natures are born together with them in their own birth, and who let their mind dissolve into that and practice accordingly, will proceed toward the Lord in a silent, wordless state of stillness.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பெண்ணாகப் பிறக்கும் ஓர் உயிருக்குள் பெண் தன்மை மட்டுமே இருக்கும் என்று நினைப்பது அறியாமையாகும். பெண் பாலாகப் பிறக்கும் உயிருக்குள் பாதி ஆண் தன்மையும் சேர்ந்தே பிறக்கிறது.
It is ignorance to think that a life born as a woman holds within it only the nature of a woman. Within a life born in female form, half of a male nature is also born along with it.
- வரி 2Line 2
அதுபோலவே ஆண் பாலாகப் பிறக்கும் உயிருக்குள் பாதி பெண் தன்மையும் சேர்ந்தே பிறக்கிறது.
In the same way, within a life born in male form, half of a female nature is also born along with it.
- வரி 3Line 3
பாடல் #1157 இல் உள்ளபடி இறைவி தனது பெண் தன்மையிலேயே இறைவனின் ஆண் தன்மையையும் கொண்டிருக்கிறாள் என்பதையும், பாடல் #1158 இல் உள்ளபடி இறைவனும் தனது ஆண் தன்மையிலேயே இறைவியின் பெண் தன்மையையும் கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்துகொண்ட சாதகர்கள், தமது பிறவியிலேயே இவ்விரு தன்மைகளும் தம்மோடு சேர்ந்தே பிறப்பதை முழுவதும் அறிந்துகொள்கிறார்கள்.
Seekers who come to know that the goddess, as in verse 1157, holds within her own female nature the male nature of the Lord too, and that the Lord, as in verse 1158, holds within his own male nature the female nature of the goddess too, fully realize that both these natures are born together with them in their own birth.
- வரி 4Line 4
அதிலேயே மனம் லயித்துச் சாதகம் செய்தால், பேச்சற்ற மோன நிலையில் இறைவனை நோக்கிச் செல்வார்கள்.
Letting their mind dissolve into that and practicing accordingly, they will proceed toward the Lord in a silent, wordless state of stillness.
திருமந்திரம் பாடல் #1159





