தொடர்ந்து படிக்கread this section continuously
வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்றபெண்ணொரு பாகம் பிறவிபெண் ணாமே.
உரைmeaning
பர வெளியில் பரந்து விரிந்திருக்கும் இறைவன், பேரன்பு மிக்க இறைவியின் இதயத் தாமரையிலும், பேரின்பத் தேனைக்கொண்டு மிகவும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலையுடைய இறைவியின் மனதிலும் வீற்றிருக்கிறான். மாயை எனும் மயக்கத்தில் அடங்காதவனாகிய இறைவன், அடியவர்களின் தேவைக்கு ஏற்பப் பலவகையாக நின்றாலும், தனது உடலில் சரிபாதி பாகமாக இறைவியைக் கொண்டிருப்பதால், இயல்பிலேயே இறைவியின் பெண் தன்மையும் உடையவனாக இருக்கிறான்.
The Lord, who spreads and pervades the vast expanse, dwells within the heart-lotus of the goddess of great love and also within the mind of the goddess whose hair, decked with flowers of deep fragrance, holds the honey of supreme bliss. The Lord, who cannot be bound by the delusion called Maya, though he stands in many forms according to the needs of his devotees, since he holds the goddess as an equal half within his own body, is by his very nature possessed also of the feminine nature of the goddess.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பர வெளியில் பரந்து விரிந்திருக்கும் இறைவன், பேரன்பு மிக்க இறைவியின் இதயத் தாமரையிலும் வீற்றிருக்கிறான்.
The Lord, who spreads and pervades the vast expanse, dwells within the heart-lotus of the goddess of great love.
- வரி 2Line 2
பேரின்பத் தேனைக்கொண்டு மிகவும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலையுடைய இறைவியின் மனதிலும் அவன் வீற்றிருக்கிறான்.
He also dwells within the mind of the goddess whose hair, decked with flowers of deep fragrance, holds the honey of supreme bliss.
- வரி 3Line 3
மாயை எனும் மயக்கத்தில் அடங்காதவனாகிய இறைவன், அடியவர்களின் தேவைக்கு ஏற்பப் பலவகையாக நின்றாலும்,
The Lord, who cannot be bound by the delusion called Maya, though he stands in many forms according to the needs of his devotees,
- வரி 4Line 4
தனது உடலில் சரிபாதி பாகமாக இறைவியைக் கொண்டிருப்பதால், இயல்பிலேயே இறைவியின் பெண் தன்மையும் உடையவனாக இருக்கிறான்.
since he holds the goddess as an equal half within his own body, is by his very nature possessed also of the feminine nature of the goddess.
திருமந்திரம் பாடல் #1158





