தொடர்ந்து படிக்கread this section continuously
மாதுநல் லாளு மணாள னிருந்திடப்பாதிநல் லாளும் பகவனும் ஆனதுசோதிநல் லாளைத் துணைப்பெய வல்லீரேல்வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.
உரைmeaning
பாடல் #1156 இல் உள்ளபடி, சாதகரின் ஐந்து புலன்களையும் தடுத்தருளி பேரழகுடன் நன்மையின் வடிவமாக வீற்றிருக்கும் இறைவி, இறைவனுடன் சேர்ந்து அவனில் சரிபாதியாக இருக்கும்போது ஜோதி வடிவத்தில் பூரண சக்தியாக வீற்றிருக்கிறாள். இந்த இறைவியைத் தமது உயிருக்குத் துணையாகப் பெறக்கூடிய சாதகர்களுக்கு, வினைகளால் வரும் துன்பங்களைத் தீர்த்து, அவர்களுடன் இருக்கும் மாசுமலங்களை அகற்றித் தூய்மையாக்கி அருள்கிறாள் இறைவி.
As in verse 1156, the goddess, who graciously restrains the seeker's five senses and dwells in great beauty as the very form of good, when joined with the Lord as his equal half, dwells as the full power in a form of light. To seekers who are able to obtain this goddess as the support of their own life, the goddess resolves the sufferings that come from karma, and removes and purifies the impurities and defilements that cling to them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1156 இல் உள்ளபடி, சாதகரின் ஐந்து புலன்களையும் தடுத்தருளி பேரழகுடன் நன்மையின் வடிவமாக வீற்றிருக்கும் இறைவி,
As in verse 1156, the goddess, who graciously restrains the seeker's five senses and dwells in great beauty as the very form of good,
- வரி 2Line 2
இறைவனுடன் சேர்ந்து அவனில் சரிபாதியாக இருக்கும்போது ஜோதி வடிவத்தில் பூரண சக்தியாக வீற்றிருக்கிறாள்.
when joined with the Lord as his equal half, dwells as the full power in a form of light.
- வரி 3Line 3
இந்த இறைவியைத் தமது உயிருக்குத் துணையாகப் பெறக்கூடிய சாதகர்களுக்கு, வினைகளால் வரும் துன்பங்களைத் தீர்க்கிறாள்.
To seekers who are able to obtain this goddess as the support of their own life, she resolves the sufferings that come from karma.
- வரி 4Line 4
அவர்களுடன் இருக்கும் மாசுமலங்களை அகற்றித் தூய்மையாக்கி அருள்கிறாள் இறைவி.
The goddess removes and purifies the impurities and defilements that cling to them.
திருமந்திரம் பாடல் #1157





