திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1156

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தரித்திருந் தாளவள் தன்னொளி நோக்கிவிரித்திருந் தாளவள் வேதப் பொருளைக்குறித்திருந் தாளவள் கூறிய ஐந்துமறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.

உரை

பாடல் #1155 இல் உள்ளபடி, சாதகரின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக வீற்றிருக்கும் இறைவி, சாதகர் எப்போதும் தன்னுடைய ஒளி உருவத்தைத் தரிசித்துக்கொண்டே இருக்கும்படி செய்து, வேதங்களின் உண்மையான பொருளாகிய பேரறிவு ஞானத்தை அவருக்குக் கொடுத்து, ஐந்து புலன்களின் வழியே வரும் வினைகளின் கொடுமையை சாதகருக்கு எடுத்துச் சொல்லி, அவை வந்துசேராதவாறு ஐந்து புலன்களையும் தடுத்தருளி, பேரழகுடன் நன்மையே வடிவாக வீற்றிருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1155 இல் உள்ளபடி, சாதகரின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக வீற்றிருக்கும் இறைவி, சாதகர் எப்போதும் தன்னுடைய ஒளி உருவத்தைத் தரிசித்துக்கொண்டே இருக்கும்படி செய்கிறாள்.

  • வரி 2

    வேதங்களின் உண்மையான பொருளாகிய பேரறிவு ஞானத்தை அவருக்குக் கொடுக்கிறாள்.

  • வரி 3

    ஐந்து புலன்களின் வழியே வரும் வினைகளின் கொடுமையை சாதகருக்கு எடுத்துச் சொல்லி, அவை வந்துசேராதவாறு ஐந்து புலன்களையும் தடுத்தருளுகிறாள்.

  • வரி 4

    பேரழகுடன் நன்மையே வடிவாக வீற்றிருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1156

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout