திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1155

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நாலித ழாறில் விரிந்தது தொண்ணூறுதானித ழானவை நாற்பத்து நாலுளபாலித ழானவள் பங்கய மூலமாய்த்தானித ழாகித் தரித்திருந் தாளே.

உரை

நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியானவள், அதற்கு மேலுள்ள ஆறு சக்கரங்களுக்கும் விரிந்து சென்று, உடலில் தொண்ணூறு தத்துவங்களாக விரிந்திருக்கிறாள். மூலாதாரத்திற்கும் புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் இடைப்பட்ட நான்கு சக்கரங்களில் உள்ள மொத்தம் நாற்பத்துநான்கு இதழ்களாகவும் குண்டலினி சக்தியே வீற்றிருந்து, அங்கிருந்து ஆக்ஞா சக்கரம் சென்று, அதையும் தாண்டி தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் இறைவனுடன் சேர்ந்து பூரண சக்தியாகி, அங்கிருந்து கீழேயுள்ள ஆறு சக்கரங்களையும் தாங்கிக்கொண்டு இருக்கிறாள். இப்பாடலின் தலைப்பாகிய ஆதார ஆதேயத்தில், தாங்கியிருக்கும் பொருள் (ஆதாரம்) பூரண சக்தியும், தாங்கப்படும் பொருள் (ஆதேயம்) ஆறு ஆதார சக்கரங்களும், அதன் பயன் உடலிலுள்ள தொண்ணூறு தத்துவங்களை இயக்குவதும் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியானவள், அதற்கு மேலுள்ள ஆறு சக்கரங்களுக்கும் விரிந்து சென்று, உடலில் தொண்ணூறு தத்துவங்களாக விரிந்திருக்கிறாள்.

  • வரி 2

    மூலாதாரத்திற்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் இடைப்பட்ட நான்கு சக்கரங்களில் உள்ள மொத்தம் நாற்பத்துநான்கு இதழ்களாகவும் குண்டலினி சக்தியே வீற்றிருக்கிறாள்.

  • வரி 3

    அங்கிருந்து ஆக்ஞா சக்கரம் சென்று, அதையும் தாண்டி தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் இறைவனுடன் சேர்ந்து பூரண சக்தியாகி, கீழேயுள்ள ஆறு சக்கரங்களையும் தாங்கிக்கொண்டு இருக்கிறாள்.

  • வரி 4

    இப்பாடலின் தலைப்பாகிய ஆதார ஆதேயத்தில், தாங்கியிருக்கும் பொருள் (ஆதாரம்) பூரண சக்தியும், தாங்கப்படும் பொருள் (ஆதேயம்) ஆறு ஆதார சக்கரங்களும், அதன் பயன் உடலிலுள்ள தொண்ணூறு தத்துவங்களை இயக்குவதும் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1155

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout