திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1153

தொடர்ந்து படிக்கread this section continuously

தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறைபாவித்து உலகம் படைக்கின்ற காலத்துமேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்துஆவிக்கும் அப்பொருள் தானது தானே.

உரை

பாடல் #1152 இல் உள்ளபடி, சாதகருக்குள் புகுந்து வீற்றிருக்கும் இறைவியே தானே இறைவனாகவும் இருக்கிறாள். அசையாத சக்தியாகிய இறைவன் தன்னுடைய அம்சமாகவே உலகங்கள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று எண்ணியபோதே, அவனுடன் சேர்ந்து அசையும் சக்தியாக இருந்த இறைவியும், மேலிருக்கும் ஏழு உலகங்களையும் கீழிருக்கும் ஏழு உலகங்களையும் அவனோடு சேர்ந்து உருவாக்கினாள். அது மட்டுமின்றி, இந்தப் பதினான்கு உலகங்களிலும் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும், இறைவனின் அம்சமாக இருக்கும் இறைவியே ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1152 இல் உள்ளபடி, சாதகருக்குள் புகுந்து வீற்றிருக்கும் இறைவியே தானே இறைவனாகவும் இருக்கிறாள்.

  • வரி 2

    அசையாத சக்தியாகிய இறைவன் தன்னுடைய அம்சமாகவே உலகங்கள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று எண்ணியபோதே,

  • வரி 3

    அவனுடன் சேர்ந்து அசையும் சக்தியாக இருந்த இறைவியும், மேலிருக்கும் ஏழு உலகங்களையும் கீழிருக்கும் ஏழு உலகங்களையும் அவனோடு சேர்ந்து உருவாக்கினாள்.

  • வரி 4

    அது மட்டுமின்றி, இந்தப் பதினான்கு உலகங்களிலும் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும், இறைவனின் அம்சமாக இருக்கும் இறைவியே ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #1153

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout