தொடர்ந்து படிக்கread this section continuously
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடிபல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடிபுல்லிசைப் பாவையைப் போதத் துரந்திட்டுவல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.
உரைmeaning
மென்மையான இசை போன்ற ஒலி வடிவில் இருக்கும் பேரழகுடைய இறைவி, அகன்ற பரவெளியில் மென்மையான கொடி போல ஒளி வடிவில் பரவி இருக்கிறாள். பேரழகுடைய இறைவி, கூட்டு வழிபாட்டில் பலவகையாகப் போற்றி வணங்கும் பக்தர்களின் தகுதிக்கு ஏற்பப் பயன்களை அருளும் பசுமையான கொடி போன்றவள். தன் அடியவர்களுக்குள் இருக்கும் பேரழகுடைய மாயையாகிய சக்தியை வெளியேற்றித் துரத்திவிட்டு, அருள் செய்யும் ஆற்றலில் வல்லமை பொருந்திய பேரழகுடைய இறைவி அவர்களின் மனத்திற்குள் புகுந்து அருளுடன் வீற்றிருப்பாள்.
The goddess of great beauty, who is in the form of sound like a soft melody, spreads through the vast expanse in the form of light, like a tender vine. The goddess of great beauty is like a green vine that grants fruits to devotees according to their maturity, devotees who praise and worship her in many ways in communal prayer. Driving out and expelling the beautiful power of illusion that lies within her devotees, the goddess of great beauty, whose grace is mighty in its power, enters their minds and dwells there with grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மென்மையான இசை போன்ற ஒலி வடிவில் இருக்கும் பேரழகுடைய இறைவி, அகன்ற பரவெளியில் மென்மையான கொடி போல ஒளி வடிவில் பரவி இருக்கிறாள்.
The goddess of great beauty, who is in the form of sound like a soft melody, spreads through the vast expanse in the form of light, like a tender vine.
- வரி 2Line 2
பேரழகுடைய இறைவி, கூட்டு வழிபாட்டில் பலவகையாகப் போற்றி வணங்கும் பக்தர்களின் தகுதிக்கு ஏற்பப் பயன்களை அருளும் பசுமையான கொடி போன்றவள்.
The goddess of great beauty is like a green vine that grants fruits to devotees according to their maturity, devotees who praise and worship her in many ways in communal prayer.
- வரி 3Line 3
தன் அடியவர்களுக்குள் இருக்கும் பேரழகுடைய மாயையாகிய சக்தியை வெளியேற்றித் துரத்திவிடுகிறாள்.
She drives out and expels the beautiful power of illusion that lies within her devotees.
- வரி 4Line 4
அருள்செய்யும் ஆற்றலில் வல்லமை பொருந்திய பேரழகுடைய இறைவி அவர்களின் மனத்திற்குள் புகுந்து அருளுடன் வீற்றிருப்பாள்.
The goddess of great beauty, whose grace is mighty in its power, enters their minds and dwells there with grace.
திருமந்திரம் பாடல் #1152





