திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1151

தொடர்ந்து படிக்கread this section continuously

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரிவடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்செடியார் வினைகெடச் சேர்வரை யேன்றேன்றடியார் வினைகெடுத் தாதியு மாமே.

உரை

பாடல் #1150 இல் உள்ளபடி, சாதகர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கின்ற பசுமையான கொடி போன்ற இறைவியைப் பற்றிக்கொண்டவர்களின் உள்ளத்திற்குள், பேரின்பத்தைத் தரும் அமிழ்தத்தை ஊறச் செய்து அருளுகின்ற பேரழகியான இறைவி, திரிபுரை சக்தி என்னும் வடிவில் என்றும் இளமையுடன் இருக்கிறாள். பலவிதமான அச்சத்தைத் தரும் தீய கொடிய வினைகளை அழித்து அருள வேண்டும் என இறைவியின் திருவடிகளைப் பற்றிச் சரணடைபவர்களைத் தாங்கிக்கொண்டு, தன் அடியார்களான அவர்களுடைய தீய கொடிய வினைகளை முழுவதுமாக அழித்து அருளும் ஆதிப் பரம்பொருளாக இறைவி இருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1150 இல் உள்ளபடி, சாதகர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கின்ற பசுமையான கொடி போன்ற இறைவியைப் பற்றிக்கொண்டவர்களின் உள்ளத்திற்குள், பேரின்பத்தைத் தரும் அமிழ்தத்தை ஊறச் செய்து அருளுகிறாள்.

  • வரி 2

    பேரழகியான இறைவி, திரிபுரை சக்தி என்னும் வடிவில் என்றும் இளமையுடன் இருக்கிறாள்.

  • வரி 3

    பலவிதமான அச்சத்தைத் தரும் தீய கொடிய வினைகளை அழித்து அருள வேண்டும் என இறைவியின் திருவடிகளைப் பற்றிச் சரணடைபவர்களைத் தாங்கிக்கொள்கிறாள்.

  • வரி 4

    தன் அடியார்களான அவர்களுடைய தீய கொடிய வினைகளை முழுவதுமாக அழித்து அருளும் ஆதிப் பரம்பொருளாக இறைவி இருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1151

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout