திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1150

தொடர்ந்து படிக்கread this section continuously

போற்றியென் றாள்புவ னாபதி யம்மையென்ஆற்றலுள் நிற்கு மருந்தவப் பெண்பிள்ளைசீற்றங் கடிந்த திருநுதற் சேயிழைகூற்றந் துரக்கின்ற கொள்பைந் தொடியே.

உரை

பாடல் #1149 இல் உள்ளபடி, அண்ட சராசரங்களையும் அவற்றிலுள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவளும், உலகங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருப்பவளும், யான் போற்றி வணங்குபவளும், அரிய தவங்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் இளமை ஆற்றலுடன் இருப்பவளுமான இறைவி, தன்னைப் போற்றி வணங்கும் உயிர்களின் ஆற்றலுக்குள் வந்து வீற்றிருந்து, அவர்களின் நெற்றிக்குள் அழகிய ஆபரணங்களைச் சூடிக்கொண்டு வீற்றிருந்து, அவர்களின் அகங்காரத்தை அடக்கிவிட்டு, பசுமையான கொடியாக இருந்துகொண்டு, அவர்களுடைய கூற்றத்தை (இறப்பை) துரத்திவிட்டு ஆட்கொள்கிறாள் என இப்பாடல் உரைக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1149 இல் உள்ளபடி, அண்ட சராசரங்களையும் அவற்றிலுள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவளும், உலகங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருப்பவளும், யான் போற்றி வணங்குபவளுமான இறைவி,

  • வரி 2

    அரிய தவங்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் இளமை ஆற்றலுடன் இருப்பவள், தன்னைப் போற்றி வணங்கும் உயிர்களின் ஆற்றலுக்குள் வந்து வீற்றிருந்து, அவர்களின் நெற்றிக்குள் அழகிய ஆபரணங்களைச் சூடிக்கொண்டு வீற்றிருக்கிறாள்.

  • வரி 3

    அவர்களின் அகங்காரத்தை அடக்கிவிட்டு, பசுமையான கொடியாக இருந்துகொண்டு,

  • வரி 4

    அவர்களுடைய கூற்றத்தை (இறப்பை) துரத்திவிட்டு ஆட்கொள்கிறாள் என இப்பாடல் உரைக்கிறது.

திருமந்திரம் பாடல் #1150

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout