தொடர்ந்து படிக்கread this section continuously
புனையவல் லாள்புவ னத்திர யங்கள்வனையவல் லாளண்ட கோடிக ளுள்ளேபுனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்புனையவல் லாளையும் போற்றியென் பேனே.
உரைmeaning
பாடல் #1148 இல் உள்ளபடி, மூன்று ஜோதிகளையும் ஒன்றாகச் சேர்த்து நிற்கும் இறைவி, மேலுலகம், பூலோகம், கீழுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்குள்ளும் கலந்து நின்று கோடிக்கணக்கான அண்ட சராசரங்களையும், அவற்றுக்குள் பல உயிர்களையும் உருவாக்கும் வல்லமை பெற்றவள். உயிர்களைப் படைத்து, அவற்றுக்கு அண்டத்தில் இருக்கும் இறைவனுடைய பேரொளியைக் காட்டி அருளி, அந்த ஜோதியை அடையும் வழியையும் அருளுகிறாள். இவை அனைத்தையும் செய்யும் வல்லமை பெற்ற இறைவியையே யானும் போற்றி வணங்குகிறேன்.
As in verse 1148, the goddess who stands holding all three lights joined as one, merges within the three worlds, the upper world, this earth, and the nether world, and has the power to bring forth countless universes with all their moving and unmoving things, and the many lives within them. She creates lives, shows them by her grace the great light of the Lord that is in the universe, and grants them the way to reach that light. It is this goddess, who has the power to do all this, that I too praise and worship.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1148 இல் உள்ளபடி, மூன்று ஜோதிகளையும் ஒன்றாகச் சேர்த்து நிற்கும் இறைவி, மேலுலகம், பூலோகம், கீழுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்குள்ளும் கலந்து நின்று கோடிக்கணக்கான அண்ட சராசரங்களையும், அவற்றுக்குள் பல உயிர்களையும் உருவாக்கும் வல்லமை பெற்றவள்.
As in verse 1148, the goddess who stands holding all three lights joined as one, merges within the three worlds, the upper world, this earth, and the nether world, and has the power to bring forth countless universes with all their moving and unmoving things, and the many lives within them.
- வரி 2Line 2
உயிர்களைப் படைத்து,
She creates lives,
- வரி 3Line 3
அவற்றுக்கு அண்டத்தில் இருக்கும் இறைவனுடைய பேரொளியைக் காட்டி அருளி, அந்த ஜோதியை அடையும் வழியையும் அருளுகிறாள்.
shows them by her grace the great light of the Lord that is in the universe, and grants them the way to reach that light.
- வரி 4Line 4
இவை அனைத்தையும் செய்யும் வல்லமை பெற்ற இறைவியையே யானும் போற்றி வணங்குகிறேன்.
It is this goddess, who has the power to do all this, that I too praise and worship.
திருமந்திரம் பாடல் #1149





