தொடர்ந்து படிக்கread this section continuously
நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்திதுகிலுடை யாடை நிலம்பொதி பாதம்அகிலமு மண்ட முழுதுஞ்செம் மாந்துபுகலும்முச் சோதி புனையநிற் பாளே.
உரைmeaning
பாடல் #1147 இல் உள்ளபடி, சாதகருக்குள் விரும்பி வீற்றிருக்கும் மிகப் பெரும் தெய்வமாகிய இறைவியே, நான்கு வேதங்களும் புகழ்ந்து சொல்லும் மாபெரும் சக்தியாக இருக்கிறாள். இறைவன், இறைவி, சாதகரின் ஆன்மா ஆகிய மூன்று ஜோதிகளும் ஒன்றோடொன்று சேர்ந்து நிற்கும் பூரண சக்தியாக, அனைத்துத் திசைகளும் அவளுடைய அழகிய ஆடையாகவும், பூமியையும் கடந்து நிற்கும் திருவடிகளையும் கொண்டு நிற்கும் அவளை, வேதங்களோடு அண்ட சராசரங்களும் அவற்றிலுள்ள அனைத்து உலகங்களும் சிறப்பாகப் போற்றி வணங்குகின்றன.
As in verse 1147, the goddess, the very great deity who dwells within the seeker by her own desire, is the mighty power that all four Vedas praise and speak of. As the full power in which the three lights, the Lord, the goddess, and the seeker's own soul, stand joined with one another, she stands with all directions as her beautiful garment and with sacred feet that reach beyond the earth; and the Vedas, together with the whole universe and all the worlds within it, honor and worship her with special reverence.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1147 இல் உள்ளபடி, சாதகருக்குள் விரும்பி வீற்றிருக்கும் மிகப் பெரும் தெய்வமாகிய இறைவியே, நான்கு வேதங்களும் புகழ்ந்து சொல்லும் மாபெரும் சக்தியாக இருக்கிறாள்.
As in verse 1147, the goddess, the very great deity who dwells within the seeker by her own desire, is the mighty power that all four Vedas praise and speak of.
- வரி 2Line 2
இறைவன், இறைவி, சாதகரின் ஆன்மா ஆகிய மூன்று ஜோதிகளும் ஒன்றோடொன்று சேர்ந்து நிற்கும் பூரண சக்தியாக அவள் இருக்கிறாள்.
She is the full power in which the three lights, the Lord, the goddess, and the seeker's own soul, stand joined with one another.
- வரி 3Line 3
அனைத்துத் திசைகளும் அவளுடைய அழகிய ஆடையாகவும், பூமியையும் கடந்து நிற்கும் திருவடிகளையும் கொண்டு அவள் நிற்கிறாள்.
She stands with all directions as her beautiful garment and with sacred feet that reach beyond the earth.
- வரி 4Line 4
வேதங்களோடு அண்ட சராசரங்களும் அவற்றிலுள்ள அனைத்து உலகங்களும் அவளைச் சிறப்பாகப் போற்றி வணங்குகின்றன.
The Vedas, together with the whole universe and all the worlds within it, honor and worship her with special reverence.
திருமந்திரம் பாடல் #1148





