திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1147

தொடர்ந்து படிக்கread this section continuously

அம்பன்ன கண்ணி யரிவை மனோன்மணிகொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவியசெம்பொன்செ யாக்கை செறிகமழ் நாடொறும்நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

உரை

அம்பைப் போன்ற கூர்மையான கண்களையும், என்றும் மாறாத இளமையையும், இறைவனோடு சேர்ந்திருக்கும் மனோன்மணி என்னும் பெயரையும், கொம்பைப்போல மெலிந்து வளைந்த இடையையும், வாசனை மிக்க மலர்களைச் சூடிய கூந்தலையும் உடைய இறைவி, சாதகருக்குள் முழுவதும் பரவி உலாவிக்கொண்டே இருக்கும்போது, சாதகரின் உடல் தூய்மையான தங்கத்தால் செய்ததைப்போல மாறி, அவருக்குள்ளிருந்து நறுமணம் திரண்டு நாள்தோறும் வீசிக்கொண்டே இருக்கும். இப்படிச் சாதகம் செய்து வீற்றிருக்கும் சாதகரை அன்போடு நோக்கியபடியே இறைவியும் அவருடன் விரும்பி வீற்றிருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    அம்பைப் போன்ற கூர்மையான கண்களையும், என்றும் மாறாத இளமையையும், இறைவனோடு சேர்ந்திருக்கும் மனோன்மணி என்னும் பெயரையும் உடைய இறைவி,

  • வரி 2

    கொம்பைப்போல மெலிந்து வளைந்த இடையையும், வாசனை மிக்க மலர்களைச் சூடிய கூந்தலையும் உடையவளாக, சாதகருக்குள் முழுவதும் பரவி உலாவிக்கொண்டே இருக்கிறாள்.

  • வரி 3

    அப்போது சாதகரின் உடல் தூய்மையான தங்கத்தால் செய்ததைப்போல மாறி, அவருக்குள்ளிருந்து நறுமணம் திரண்டு நாள்தோறும் வீசிக்கொண்டே இருக்கும்.

  • வரி 4

    இப்படிச் சாதகம் செய்து வீற்றிருக்கும் சாதகரை அன்போடு நோக்கியபடியே இறைவியும் அவருடன் விரும்பி வீற்றிருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1147

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout