தொடர்ந்து படிக்கread this section continuously
இருந்தனள் தன்முக மாறொடு நாலாய்ப்பரந்தனள் வாயுத் திசைதிசை தோறுங்குவிந்தன முத்தின் முகவொளி நோக்கிநடந்தது தேற லதோமுக மம்பே.
உரைmeaning
பாடல் #1145 இல் உள்ளபடி, சாதகருக்குள் இருக்கும் அனைத்துச் சக்கரங்களிலும் வீற்றிருக்கும் இறைவி, பத்துத் திசைகளையும் காக்கும் தனது பத்து முகங்களையும் சாதகரது உடலிலுள்ள பத்து வகையான வாயுக்களுடன் சேர்த்து அனைத்துத் திசைகளுக்கும் பரவிச் செல்கிறாள். அப்படிப் பரவிச் சென்ற சக்தி ஒருமுகமாகக் குவிந்து, முத்திலிருந்து வெளிவரும் பிரகாசம் போலச் சாதகரின் முகத்திலிருந்து ஒளி வீசி வெளிப்படுகிறது. இந்த நிலையை அடைந்த சாதகருக்கு, அமிழ்தம் போன்ற பேரின்பத்தைத் தரும் இறைவனது கீழ்நோக்கும் முகம் விரைவாகக் கிடைத்து, பாடல் #523 இல் உள்ளபடி தமது உடலும் இந்த அண்டமும் வேறுவேறு இல்லை என்கிற நிலையை சாதகர் அடைவார்.
As in verse 1145, the goddess who dwells in every chakra within the seeker spreads through every direction, joining her own ten faces that guard the ten directions with the ten kinds of vital airs in the seeker's body. The power that thus spreads out gathers into a single point and shines forth from the seeker's face like the radiance that comes out of a pearl. The seeker who attains this state quickly comes to receive the downward-facing face of the Lord that grants bliss like nectar, and, as in verse 523, attains the state in which his own body and this universe are no longer different from one another.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1145 இல் உள்ளபடி, சாதகருக்குள் இருக்கும் அனைத்துச் சக்கரங்களிலும் வீற்றிருக்கும் இறைவி, பத்துத் திசைகளையும் காக்கும் தனது பத்து முகங்களையும் சாதகரது உடலிலுள்ள பத்து வகையான வாயுக்களுடன் சேர்த்து அனைத்துத் திசைகளுக்கும் பரவிச் செல்கிறாள்.
As in verse 1145, the goddess who dwells in every chakra within the seeker spreads through every direction, joining her own ten faces that guard the ten directions with the ten kinds of vital airs in the seeker's body.
- வரி 2Line 2
அப்படிப் பரவிச் சென்ற சக்தி ஒருமுகமாகக் குவிந்து, முத்திலிருந்து வெளிவரும் பிரகாசம் போலச் சாதகரின் முகத்திலிருந்து ஒளி வீசி வெளிப்படுகிறது.
The power that thus spreads out gathers into a single point and shines forth from the seeker's face like the radiance that comes out of a pearl.
- வரி 3Line 3
இந்த நிலையை அடைந்த சாதகருக்கு, அமிழ்தம் போன்ற பேரின்பத்தைத் தரும் இறைவனது கீழ்நோக்கும் முகம் விரைவாகக் கிடைக்கும்.
The seeker who attains this state quickly comes to receive the downward-facing face of the Lord that grants bliss like nectar.
- வரி 4Line 4
பாடல் #523 இல் உள்ளபடி தமது உடலும் இந்த அண்டமும் வேறுவேறு இல்லை என்கிற நிலையை சாதகர் அடைவார்.
And, as in verse 523, he attains the state in which his own body and this universe are no longer different from one another.
திருமந்திரம் பாடல் #1146





