தொடர்ந்து படிக்கread this section continuously
முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர்எச்சது ரத்து மிடம்பெற வோடிடக்கைச்சது ரத்துக் கடந்துள் ளொளிபெறஎச்சது ரத்து மிருந்தனள் தானே.
உரைmeaning
பாடல் #1144 இல் உள்ளபடி, மூன்று மூலைகளையுடைய சதுர அமைப்பில் இருக்கும் மூலாதார சக்கரத்திலிருந்து விதை போல முளைத்துக் கிளம்பிய குண்டலினி அக்னிச்சுடர், ஒவ்வொரு சக்கரத்திற்கும் சென்று, அங்கிருந்து தொடர்ந்து மேலே சகஸ்ரதளத்தை நோக்கிச் சென்று, தலை உச்சித் துளையைக் கடந்து பரவெளிக்குள் சென்று, அங்கிருக்கும் ஜோதி வடிவான இறைவனை அடைந்து அவரிடமுள்ள ஒளியைப் பெற்றுவிட்டால், அந்த ஒளியானது இறைவியாக சாதகருக்குள் நுழைந்து, அவருக்குள் இருக்கும் அனைத்துச் சக்கரங்களிலும் அமர்ந்துவிடுவாள்.
As in verse 1144, the kundalini fire, which springs up like a seed from the Muladhara chakra that lies within the three-cornered square, travels to each chakra in turn, and from there continues upward toward the Sahasradala, crosses the aperture at the crown of the head, and passes into the vast space beyond. When it reaches the Lord who is there in the form of light and receives the light that is his, that light enters the seeker as the goddess and comes to settle in every chakra within him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1144 இல் உள்ளபடி, மூன்று மூலைகளையுடைய சதுர அமைப்பில் இருக்கும் மூலாதார சக்கரத்திலிருந்து விதை போல முளைத்துக் கிளம்பிய குண்டலினி அக்னிச்சுடர், ஒவ்வொரு சக்கரத்திற்கும் சென்றது.
As in verse 1144, the kundalini fire, which springs up like a seed from the Muladhara chakra that lies within the three-cornered square, travels to each chakra in turn.
- வரி 2Line 2
அங்கிருந்து தொடர்ந்து மேலே சகஸ்ரதளத்தை நோக்கிச் சென்று, தலை உச்சித் துளையைக் கடந்து பரவெளிக்குள் சென்றது.
From there it continues upward toward the Sahasradala, crosses the aperture at the crown of the head, and passes into the vast space beyond.
- வரி 3Line 3
அங்கிருக்கும் ஜோதி வடிவான இறைவனை அடைந்து அவரிடமுள்ள ஒளியைப் பெற்றுவிட்டால்,
When it reaches the Lord who is there in the form of light and receives the light that is his,
- வரி 4Line 4
அந்த ஒளியானது இறைவியாக சாதகருக்குள் நுழைந்து, அவருக்குள் இருக்கும் அனைத்துச் சக்கரங்களிலும் அமர்ந்துவிடுவாள்.
that light enters the seeker as the goddess and comes to settle in every chakra within him.
திருமந்திரம் பாடல் #1145





