தொடர்ந்து படிக்கread this section continuously
அடுக்குந் தாமரை யாதி யிருப்பிடம்எடுக்கும் தாமரை யில்லகத் துள்ளதுமடுக்கும் தாமரை மத்தகத் தேசெலமுடுக்கும் தாமரை முச்சது ரத்தே.
உரைmeaning
பாடல் #1143 இல் உள்ளபடி, ஒன்பது வகையான சக்திகளும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பதற்கு ஆதார சக்தியாக இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் இறைவனின் இருப்பிடமாகும். உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் அமிழ்தம் சாதகரின் உடலுக்குள்ளிருந்து ஊறிக்கொண்டே இருக்கிறது. உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற இந்தச் சக்தியினால் தானே இயக்குகிறோம் என்கிற அகங்காரம் சாதகருக்கு வந்துவிடாதபடி நெற்றியின் உச்சியில் இருந்துகொண்டு சகஸ்ரதள சக்தி தடுத்துக் காக்கிறது. சாதகரின் உடலை இயக்கத் தேவைப்படும் சக்தியை மூலாதாரம் சகஸ்ரதளத்திலிருந்து சிறிதளவு எடுத்துக் கொள்கிறது.
As in verse 1143, the thousand-petalled lotus in the Sahasradala, which is the sustaining power for all nine kinds of power to keep continuing to act, is the abode of the Lord. The nectar that gives the body the power it needs keeps welling up continually from within the seeker's body. So that the seeker does not fall into the pride of thinking that he himself is the one moving all the worlds by this power, the power of the Sahasradala stands at the crown of the forehead and holds him back and guards him. The Muladhara draws off only a small portion of the power needed to move the seeker's body from the Sahasradala.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1143 இல் உள்ளபடி, ஒன்பது வகையான சக்திகளும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பதற்கு ஆதார சக்தியாக இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் இறைவனின் இருப்பிடமாகும்.
As in verse 1143, the thousand-petalled lotus in the Sahasradala, which is the sustaining power for all nine kinds of power to keep continuing to act, is the abode of the Lord.
- வரி 2Line 2
உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் அமிழ்தம் சாதகரின் உடலுக்குள்ளிருந்து ஊறிக்கொண்டே இருக்கிறது.
The nectar that gives the body the power it needs keeps welling up continually from within the seeker's body.
- வரி 3Line 3
உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற இந்தச் சக்தியினால் தானே இயக்குகிறோம் என்கிற அகங்காரம் சாதகருக்கு வந்துவிடாதபடி நெற்றியின் உச்சியில் இருந்துகொண்டு சகஸ்ரதள சக்தி தடுத்துக் காக்கிறது.
So that the seeker does not fall into the pride of thinking that he himself is the one moving all the worlds by this power, the power of the Sahasradala stands at the crown of the forehead and holds him back and guards him.
- வரி 4Line 4
சாதகரின் உடலை இயக்கத் தேவைப்படும் சக்தியை மூலாதாரம் சகஸ்ரதளத்திலிருந்து சிறிதளவு எடுத்துக் கொள்கிறது.
The Muladhara draws off only a small portion of the power needed to move the seeker's body from the Sahasradala.
திருமந்திரம் பாடல் #1144





