தொடர்ந்து படிக்கread this section continuously
நடந்தது அம்மலர் நாலுட னஞ்சாய்இருந்தனர் கன்னிக ளெட்டுட னொன்றாய்ப்படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளேதொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.
உரைmeaning
பாடல் #1142 இல் உள்ளபடி, சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக வீற்றிருக்கும் இறைவி, அங்கிருந்து வெளிப்பட்டு உலகங்கள் அனைத்தையும் இயங்க வைப்பதற்காக ஒன்பது வகையான அம்சங்களாக வெளிப்படுகிறாள். இந்த அம்சங்கள் எட்டு வகையான தேவியர்களாகவும், இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் அம்சமான மனோன்மணியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது வகையான சக்திகளாக, அவரவர்க்கு ஏற்ற தனித்தன்மையான வழிகளின் வழியே ஜோதி வடிவில் கொடி போலச் சகஸ்ரதளத்திலிருந்து வெளிப்பட்டு வளர்ந்து சென்று உலகங்கள் அனைத்தையும் இயக்குகிறார்கள். இவர்கள் தத்தம் வழிகளின் வழியே தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பதற்கான ஆதார சக்தியாக, சகஸ்ரதளத்தில் அந்த ஜோதி இருக்கிறது.
As in verse 1142, the goddess, who dwells joined with the Lord as the full power in the Sahasradala within the seeker, emerges from there as nine kinds of portions in order to set all the worlds in motion. These portions become eight kinds of goddesses, together with Manonmani, the portion of the full power in which the Lord and the goddess are joined, making nine kinds of powers in all; each through her own distinct path emerges in the form of light, like a vine, from the Sahasradala, grows forth, and sets all the worlds in motion. That light which stays in the Sahasradala is the sustaining power that keeps them continuing to act, each through her own path.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1142 இல் உள்ளபடி, சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக வீற்றிருக்கும் இறைவி, அங்கிருந்து வெளிப்பட்டு உலகங்கள் அனைத்தையும் இயங்க வைப்பதற்காக ஒன்பது வகையான அம்சங்களாக வெளிப்படுகிறாள்.
As in verse 1142, the goddess, who dwells joined with the Lord as the full power in the Sahasradala within the seeker, emerges from there as nine kinds of portions in order to set all the worlds in motion.
- வரி 2Line 2
இந்த அம்சங்கள் எட்டு வகையான தேவியர்களாகவும், பூரண சக்தியின் அம்சமான மனோன்மணியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது வகையான சக்திகளாக இருக்கிறார்கள்.
These portions become eight kinds of goddesses, together with Manonmani, the portion of the full power, making nine kinds of powers in all.
- வரி 3Line 3
அவரவர்க்கு ஏற்ற தனித்தன்மையான வழிகளின் வழியே ஜோதி வடிவில் கொடி போலச் சகஸ்ரதளத்திலிருந்து வெளிப்பட்டு வளர்ந்து சென்று உலகங்கள் அனைத்தையும் இயக்குகிறார்கள்.
Each through her own distinct path emerges in the form of light, like a vine, from the Sahasradala, grows forth, and sets all the worlds in motion.
- வரி 4Line 4
இவர்கள் தத்தம் வழிகளின் வழியே தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பதற்கான ஆதார சக்தியாக, சகஸ்ரதளத்தில் அந்த ஜோதி இருக்கிறது.
That light which stays in the Sahasradala is the sustaining power that keeps them continuing to act, each through her own path.
திருமந்திரம் பாடல் #1143





