திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1142

தொடர்ந்து படிக்கread this section continuously

பைங்கொடி யாளும் பரம னிருந்திடந்திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்விண்கொடி யாக விளங்கி வருதலால்பெண்கொடி யாக நடந்தது உலகே.

உரை

பாடல் #1141 இல் உள்ளபடி, சாதகருக்குள்ளிருந்து பசுமையான கொடி போல வெளிப்பட்ட சக்தியானவள், இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக ஒரு பெரும் பிரகாசத்தைத் தருகின்ற ஜோதியாக வானம் வரை கொடி போல வளர்ந்து, உலகங்கள் அனைத்தையும் இயங்க வைக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1141 இல் உள்ளபடி, சாதகருக்குள்ளிருந்து பசுமையான கொடி போல வெளிப்பட்ட சக்தியானவள்,

  • வரி 2

    இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக ஒரு பெரும் பிரகாசத்தைத் தருகின்ற ஜோதியாகியது.

  • வரி 3

    வானம் வரை கொடி போல வளர்ந்தது.

  • வரி 4

    உலகங்கள் அனைத்தையும் இயங்க வைக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1142

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout