தொடர்ந்து படிக்கread this section continuously
தாமே லுறைவிட மாறித ழானதுபார்மே லிதழ்பதி னெட்டிரு நூறுளபூமே லுறைகின்ற புண்ணியம் வந்தனள்பார்மே லுறைகின்ற பைங்கொடி யாளே.
உரைmeaning
பாடல் #1140 இல் உள்ளபடி, இறைவனைத் தமது நெஞ்சத்திற்குள் அடையும்படி பெற்ற சாதகருக்குள், இறைவன் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிஷ்டான சக்கரத்தில் வந்து, பின்பு அங்கிருந்து நான்கு இதழ்கள் கொண்ட மூலாதார சக்கரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி விடுகிறார். அங்கிருந்து வெளிப்பட்ட சக்தியானவள் ஆறு சக்கரங்களையும் கடந்து ஏழாவதாக இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின்மேல் வீற்றிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவாள். உலகங்கள் அனைத்திலும் பரவி வீற்றிருக்கின்ற இறைவியே சகஸ்ரதள சக்தியாக அங்கிருந்து பசுமையான கொடி போல வெளிப்படுவாள்.
As in verse 1140, within the seeker who has come to hold the Lord fixed within his own heart, the Lord comes to the Swadhishthana chakra of six petals, and from there rouses the kundalini power in the Muladhara chakra of four petals. The power that emerges from there crosses all six chakras and, as the seventh, brings forth at the Sahasradala the power that dwells upon its thousand lotus petals. The goddess herself, who dwells spread through all the worlds, then emerges from there as the power of the Sahasradala, like a green vine.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1140 இல் உள்ளபடி, இறைவனைத் தமது நெஞ்சத்திற்குள் அடையும்படி பெற்ற சாதகருக்குள், இறைவன் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிஷ்டான சக்கரத்தில் வந்து,
As in verse 1140, within the seeker who has come to hold the Lord fixed within his own heart, the Lord comes to the Swadhishthana chakra of six petals,
- வரி 2Line 2
பின்பு அங்கிருந்து நான்கு இதழ்கள் கொண்ட மூலாதார சக்கரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி விடுகிறார்.
and from there rouses the kundalini power in the Muladhara chakra of four petals.
- வரி 3Line 3
அங்கிருந்து வெளிப்பட்ட சக்தியானவள் ஆறு சக்கரங்களையும் கடந்து ஏழாவதாக இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின்மேல் வீற்றிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவாள்.
The power that emerges from there crosses all six chakras and, as the seventh, brings forth at the Sahasradala the power that dwells upon its thousand lotus petals.
- வரி 4Line 4
உலகங்கள் அனைத்திலும் பரவி வீற்றிருக்கின்ற இறைவியே சகஸ்ரதள சக்தியாக அங்கிருந்து பசுமையான கொடி போல வெளிப்படுவாள்.
The goddess herself, who dwells spread through all the worlds, then emerges from there as the power of the Sahasradala, like a green vine.
திருமந்திரம் பாடல் #1141





