தொடர்ந்து படிக்கread this section continuously
உடையவ னங்கி யுருத்திர சோதிவிடையவ னேறி விளங்கி யிருக்கும்கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்தடையது வாகிய சாதகர் தாமே.
உரைmeaning
பாடல் #1139 இல் உள்ளபடி, உள்ளத்திற்குள் தெளிவு பெற்ற சாதகர்களுக்கு, மீதமிருக்கும் கர்மங்களையும் பிறவிகளையும் எரித்து அழிக்கும் அக்னியாக உருத்திரனின் அம்சம் ஜோதியாகக் காளையின்மேல் வீற்றிருந்து சாதகருக்குத் தரிசனம் தருகிறார். இதைத் தரிசித்ததால் தமது நெஞ்சத்திற்குள் இறைவனை அடையும்படி பெற்றவர்களே சாதகர்கள் ஆவார்கள்.
As in verse 1139, to seekers who have gained clarity within their heart, the portion of Rudra, as fire that burns away the karma and births still remaining, appears as a light mounted on the bull and grants the seeker a vision of himself. This verse declares that those who, by beholding this, have come to hold the Lord fixed within their own heart, are the ones who become true seekers.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1139 இல் உள்ளபடி, உள்ளத்திற்குள் தெளிவு பெற்ற சாதகர்களுக்கு,
As in verse 1139, to seekers who have gained clarity within their heart,
- வரி 2Line 2
மீதமிருக்கும் கர்மங்களையும் பிறவிகளையும் எரித்து அழிக்கும் அக்னியாக உருத்திரனின் அம்சம் ஜோதியாகக் காளையின்மேல் வீற்றிருந்து தரிசனம் தருகிறார்.
the portion of Rudra, as fire that burns away the karma and births still remaining, appears as a light mounted on the bull and grants a vision of himself.
- வரி 3Line 3
இதைத் தரிசித்ததால் தமது நெஞ்சத்திற்குள் இறைவனை அடையும்படி பெற்றவர்கள்,
Those who, by beholding this, have come to hold the Lord fixed within their own heart,
- வரி 4Line 4
அவர்களே சாதகர்கள் ஆவார்கள் என இப்பாடல் உரைக்கிறது.
are the ones who become true seekers, this verse declares.
திருமந்திரம் பாடல் #1140





