தொடர்ந்து படிக்கread this section continuously
ஆறி யிருந்த அமுத பயோதரிமாறி யிருந்த வழியறி வாரில்லைதேறி யிருந்துநற் றீபத் தொளியுடன்ஊறி யிருந்தன ளுள்ளுடை யார்க்கே.
உரைmeaning
அனைத்து உயிர்களுக்குள்ளும் மறைந்திருக்கும் அமிழ்தமான பாலை வழங்குகின்ற இறைவியை, தமக்குள்ளேயே ஆராய்ந்தறிந்து தெளிவு பெற்று, அந்த அமிழ்தமான பாலை உண்மை ஞானத்தைத் தரும் பேரொளியாக மாற்றுகின்ற வழியை அறிந்துகொண்டவர்கள் யாருமில்லை. அந்த வழியை குருவின் உபதேசத்தாலோ அல்லது இறைவியின் அருளாலோ அறிந்துகொண்டு, அதன்படியே தமக்குள் ஆராய்ந்து இறைவியை அறிந்து தெளிவடைந்தவர்களின் உள்ளத்திற்குள் இருந்து, இறைவி அமிழ்தப் பாலை உண்மை ஞானத்தையும் பேரின்பத்தையும் கொடுக்கின்ற பேரொளி தீபமாக ஊறிக்கொண்டே இருப்பாள்.
There is no one who has come to know, through their own inquiry into the goddess who lies hidden within all lives and grants the nectar milk, and by gaining that clarity, the way to turn that nectar milk into the great light that grants true knowledge. Those who come to know that way through the teaching of a Guru or through the grace of the goddess, and who accordingly inquire within themselves and know the goddess and attain that clarity, will have the goddess continually welling up from within their heart as the great light lamp that grants both true knowledge and supreme bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்து உயிர்களுக்குள்ளும் மறைந்திருக்கும் அமிழ்தமான பாலை வழங்குகின்ற இறைவியை, தமக்குள்ளேயே ஆராய்ந்தறிந்து தெளிவு பெறவேண்டும்.
One must come to know, through inquiry within oneself, the goddess who lies hidden within all lives and grants the nectar milk, and attain clarity.
- வரி 2Line 2
அந்த அமிழ்தமான பாலை உண்மை ஞானத்தைத் தரும் பேரொளியாக மாற்றுகின்ற வழியை அறிந்துகொண்டவர்கள் யாருமில்லை.
There is no one who has come to know the way to turn that nectar milk into the great light that grants true knowledge.
- வரி 3Line 3
அந்த வழியை குருவின் உபதேசத்தாலோ அல்லது இறைவியின் அருளாலோ அறிந்துகொண்டு, தமக்குள் ஆராய்ந்து இறைவியை அறிந்து தெளிவடைந்தவர்கள்,
Those who come to know that way through the teaching of a Guru or through the grace of the goddess, and who inquire within themselves and know the goddess and attain that clarity,
- வரி 4Line 4
அவர்களின் உள்ளத்திற்குள் இருந்து இறைவி அமிழ்தப் பாலை உண்மை ஞானத்தையும் பேரின்பத்தையும் கொடுக்கின்ற பேரொளி தீபமாக ஊறிக்கொண்டே இருப்பாள்.
will have the goddess continually welling up from within their heart as the great light lamp that grants both true knowledge and supreme bliss.
திருமந்திரம் பாடல் #1139





