தொடர்ந்து படிக்கread this section continuously
சிந்தையி னுள்ளே திரியுஞ் சிவசத்திவிந்துவும் நாதமு மாயே விரிந்தனள்சந்திர பூமி சடாதரி சாத்தவிஅந்தமொ டாதியதாம் வண்ணத் தாளே.
உரைmeaning
பாடல் #1137 இல் உள்ளபடி, இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கின்ற சாதகரின் சிந்தைக்குள் வீற்றிருக்கும் இறைவியும் இறைவனும் சேர்ந்த பூரண சக்தியானது, அவருடைய உடலுக்குள்ளிருந்து ஒளியாகவும் ஒலியாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரவி அனைத்தையும் இயக்குகிறது. இறைவனைப் போலவே சாதகரும் சந்திரனைச் சூடிக்கொண்டு சடைமுடி தரித்துக்கொண்டு சாத்வீகக் குணத்துடன், இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் உருவமாகவே ஆகிவிடுகிறார்.
As in verse 1137, the full power that is the goddess and the Lord joined together, dwelling within the thought of the seeker who thinks that the goddess and he are one, spreads out from within his body as light and as sound through the whole world and sets everything in motion. Like the Lord himself, the seeker too comes to wear the crescent moon, bear the matted crown, and, carrying a Sattvic nature, become the very form of the full power in which the Lord and the goddess are joined.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1137 இல் உள்ளபடி, இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கின்ற சாதகரின் சிந்தைக்குள் வீற்றிருக்கும் இறைவியும் இறைவனும் சேர்ந்த பூரண சக்தியானது,
As in verse 1137, the full power that is the goddess and the Lord joined together, dwelling within the thought of the seeker who thinks that the goddess and he are one,
- வரி 2Line 2
அவருடைய உடலுக்குள்ளிருந்து ஒளியாகவும் ஒலியாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரவி அனைத்தையும் இயக்குகிறது.
spreads out from within his body as light and as sound through the whole world and sets everything in motion.
- வரி 3Line 3
இறைவனைப் போலவே சாதகரும் சந்திரனைச் சூடிக்கொண்டு சடைமுடி தரித்துக்கொண்டு சாத்வீகக் குணத்துடன் இருக்கிறார்.
Like the Lord himself, the seeker too comes to wear the crescent moon, bear the matted crown, and carry a Sattvic nature.
- வரி 4Line 4
இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் உருவமாகவே சாதகர் ஆகிவிடுகிறார்.
The seeker becomes the very form of the full power in which the Lord and the goddess are joined.
திருமந்திரம் பாடல் #1138





