திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1137

தொடர்ந்து படிக்கread this section continuously

மருவொத்த மங்கையுந் தானு முடனேஉருவொத்து நின்றமை யொன்று முணரார்கருவொத்து நின்று கலக்கின்ற போதுதிருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

உரை

பாடல் #1136 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் இருக்கும் அனைத்து அம்சங்களாகவும் இறைவியே மாறி நிற்பதை உணர்ந்தாலும், தம்முடைய சொந்த உருவமும் இறைவியாகவே மாறி நிற்பதை உணராமலேயே இருக்கிறார்கள். ஆணின் அம்சமும் பெண்ணின் அம்சமும் ஒன்றுசேர்ந்து கருவாக உருவாவது போலவே, இறைவியும் தாமும் ஒன்றாகக் கலந்து நிற்பதை சாதகர்கள் உணரும்போது, இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கும் அவர்களுடைய சிந்தனைக்குள் இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1136 இல் உள்ளபடி, சாதகர்கள் தமக்குள் இருக்கும் அனைத்து அம்சங்களாகவும் இறைவியே மாறி நிற்பதை உணர்ந்தாலும், தம்முடைய சொந்த உருவமும் இறைவியாகவே மாறி நிற்பதை உணராமலேயே இருக்கிறார்கள்.

  • வரி 2

    ஆணின் அம்சமும் பெண்ணின் அம்சமும் ஒன்றுசேர்ந்து கருவாக உருவாவது போலவே, இறைவியும் தாமும் ஒன்றாகக் கலந்து நிற்பதை சாதகர்கள் உணர்கிறார்கள்.

  • வரி 3

    இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கும் அவர்களுடைய சிந்தனைக்குள்,

  • வரி 4

    இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

திருமந்திரம் பாடல் #1137

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout