திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1135

தொடர்ந்து படிக்கread this section continuously

பாலனு மாகும் பராசத்தி தன்னொடுமேலணு காவிந்து நாதங்கள் விட்டிடமூலம தாமெனு முத்திக்கு நேர்படச்சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

உரை

பாடல் #1134 இல் உள்ளபடி, எப்போதும் இளமை மாறாத உடலைப் பெற்று என்றும் இறைவியோடு சேர்ந்திருக்கின்ற சாதகர், அதற்கும் மேலான நிலைக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கின்ற அம்மை அப்பன் எனும் பிரிவினையான எண்ணங்களை விட்டுவிட வேண்டும். அவ்வாறு விட்டுவிட்டால், முக்திக்குச் சரிசமமாகச் சொல்லப்படுகின்ற நிலைக்கு நேராக வருவார்கள். அனைத்துமாகவும் நிற்கின்ற இறைவியே ஆதிப் பரம்பொருளாக இருக்கின்றாள் என்பதை அறிந்துகொள்வார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1134 இல் உள்ளபடி, எப்போதும் இளமை மாறாத உடலைப் பெற்று என்றும் இறைவியோடு சேர்ந்திருக்கின்ற சாதகர்,

  • வரி 2

    அதற்கும் மேலான நிலைக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கின்ற அம்மை அப்பன் எனும் பிரிவினையான எண்ணங்களை விட்டுவிட வேண்டும்.

  • வரி 3

    அவ்வாறு விட்டுவிட்டால், முக்திக்குச் சரிசமமாகச் சொல்லப்படுகின்ற நிலைக்கு நேராக வருவார்கள்.

  • வரி 4

    அனைத்துமாகவும் நிற்கின்ற இறைவியே ஆதிப் பரம்பொருளாக இருக்கின்றாள் என்பதை அறிந்துகொள்வார்கள்.

திருமந்திரம் பாடல் #1135

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout