தொடர்ந்து படிக்கread this section continuously
அறிவான மாயையு மைம்புலக் கூட்டத்துஅறிவான மங்கை அருளது சேரிற்பிரியா வறிவறி வாருள்ளம் பேணும்நெறிவாய சித்த நினைந்திருந் தாளே.
உரைmeaning
உயிர்களின் உண்மை அறிவை மாயை மறைத்திருப்பதால், அவர்களுக்குள் இருக்கும் ஐந்து புலன்களும் உலக அறிவை மட்டுமே கொடுக்கின்றன. இதை மாற்றி, அவர்களின் மாயையை நீக்கி உண்மை அறிவைக் கொடுக்கின்ற இறைவியின் அருள் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால், அவர்களுக்கு இறைவனும் தாமும் வேறில்லை என்கிற பேரறிவு ஞானம் கிடைத்துவிடும். அதன்பிறகு, அவர்கள் தமக்குள் இருக்கும் இறைவனை நினைத்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பதினால், இறைவியும் அவர்களின் சித்தத்தில் சேர்ந்து வீற்றிருப்பதைத் தமது செயலாக வைத்திருப்பாள்.
Because maya conceals the true knowledge of lives, the five senses within them give only worldly knowledge. If this changes, and the Goddess's grace, which removes their maya and gives true knowledge, comes to them, they attain the supreme knowledge that there is no difference between the Lord and themselves. After that, because they remain forever in supreme bliss, ever thinking of the Lord within them, the Goddess too keeps, as her own function, dwelling joined with their citta.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களின் உண்மை அறிவை மாயை மறைத்திருப்பதால், அவர்களுக்குள் இருக்கும் ஐந்து புலன்களும் உலக அறிவை மட்டுமே கொடுக்கின்றன.
Because maya conceals the true knowledge of lives, the five senses within them give only worldly knowledge.
- வரி 2Line 2
இதை மாற்றி, அவர்களின் மாயையை நீக்கி உண்மை அறிவைக் கொடுக்கின்ற இறைவியின் அருள் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால்,
If this changes, and the Goddess''s grace, which removes their maya and gives true knowledge, comes to them,
- வரி 3Line 3
அவர்களுக்கு இறைவனும் தாமும் வேறில்லை என்கிற பேரறிவு ஞானம் கிடைத்துவிடும்.
they attain the supreme knowledge that there is no difference between the Lord and themselves.
- வரி 4Line 4
அதன்பிறகு, அவர்கள் தமக்குள் இருக்கும் இறைவனை நினைத்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பதினால், இறைவியும் அவர்களின் சித்தத்தில் சேர்ந்து வீற்றிருப்பதைத் தமது செயலாக வைத்திருப்பாள்.
After that, because they remain forever in supreme bliss, ever thinking of the Lord within them, the Goddess too keeps, as her own function, dwelling joined with their citta.
திருமந்திரம் பாடல் #1133





