திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1132

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே யெழுந்தஇத் தத்துவ நாயகிவானே ரெழுந்து மதியை விளக்கினள்தேனே ரெழுகின்ற தீபத் தொளியுடன்மானே நடமுடை மன்றுஅறி யீரே.

உரை

பாடல் #1131 இல் உள்ளபடி, அடியவர்களின் உள்ளத்திற்குள் இறைவனோடு ஒன்றாக வீற்றிருக்கும் அனைத்துத் தத்துவங்களின் தலைவியான இறைவி, சிந்தனைக்குள் இருந்து, உள்ளுக்குள் இறைவனை அடையும் ஞானத்தை விளக்கி அருளுகின்றாள். அதன்படியே சாதகம் செய்து அதனால் கிடைக்கும் பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டே இருந்தால், தலை உச்சியில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்துவிடலாம். அதன் பிறகு, அங்கே இறைவன் ஆடுகின்ற அம்பலத்தைத் தரிசிக்கலாம் என்பதை அறியாமல் பலர் இருக்கின்றனர்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1131 இல் உள்ளபடி, அடியவர்களின் உள்ளத்திற்குள் இறைவனோடு ஒன்றாக வீற்றிருக்கும் அனைத்துத் தத்துவங்களின் தலைவியான இறைவி,

  • வரி 2

    சிந்தனைக்குள் இருந்து, உள்ளுக்குள் இறைவனை அடையும் ஞானத்தை விளக்கி அருளுகின்றாள்.

  • வரி 3

    அதன்படியே சாதகம் செய்து அதனால் கிடைக்கும் பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டே இருந்தால், தலை உச்சியில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்துவிடலாம்.

  • வரி 4

    அதன் பிறகு, அங்கே இறைவன் ஆடுகின்ற அம்பலத்தைத் தரிசிக்கலாம் என்பதை அறியாமல் பலர் இருக்கின்றனர்.

திருமந்திரம் பாடல் #1132

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout