திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1131

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆணைய மாயருந் தாதுள் ளிருந்தவர்மாணைய மாய மனத்தை யொருக்கிப்பின்பாணைய மாய பரத்தை யறிந்தபின்தாணைய மாயதன் னாதனத் தானே.

உரை

பாடல் #1130 இல் உள்ளபடி, இறைவனை அடைவதற்கு வேண்டிய ஞானத்தை ஆணையாக இறைவி அருளியபடியே, இன்பதுன்பங்களை அனுபவிக்காமல் உள்ளுக்குள் இறைவியைத் தியானித்துக்கொண்டே இருக்கின்ற அடியவர்களின், மாயையால் மயங்கி ஆசையின் வழியே செல்கின்ற மனதை அடக்கி ஒருமுகப்படுத்துகின்றாள். அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனை அவர்களுக்குள் அறிந்து உணர்ந்துகொள்ளும்படி இறைவி அருளுகின்றாள். அவ்வாறு பரம்பொருளை அறிந்துகொண்ட அடியவர்களின் உள்ளத்தையே தமக்கு மிகவும் பிடித்த ஆசனமாக எடுத்துக்கொண்டு இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1130 இல் உள்ளபடி, இறைவனை அடைவதற்கு வேண்டிய ஞானத்தை ஆணையாக இறைவி அருளியபடியே,

  • வரி 2

    இன்பதுன்பங்களை அனுபவிக்காமல் உள்ளுக்குள் இறைவியைத் தியானித்துக்கொண்டே இருக்கின்ற அடியவர்களின், மாயையால் மயங்கி ஆசையின் வழியே செல்கின்ற மனதை அடக்கி ஒருமுகப்படுத்துகின்றாள்.

  • வரி 3

    அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனை அவர்களுக்குள் அறிந்து உணர்ந்துகொள்ளும்படி இறைவி அருளுகின்றாள்.

  • வரி 4

    அவ்வாறு பரம்பொருளை அறிந்துகொண்ட அடியவர்களின் உள்ளத்தையே தமக்கு மிகவும் பிடித்த ஆசனமாக எடுத்துக்கொண்டு இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

திருமந்திரம் பாடல் #1131

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout