திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1130

தொடர்ந்து படிக்கread this section continuously

தார்மே லுறைகின்ற தண்மலர் நான்முகன்பார்மே லிருப்ப தொருநூறு தானுளபூமே லுறைகின்ற போதகம் வந்தனள்நாமே லுறைகின்ற நாயகி ஆணையே.

உரை

தண்டின் மேல் வளர்ந்து விரிந்திருக்கும் குளிர்ந்த தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன், உலகத்தில் வந்து பிறவி எடுக்க வேண்டிய உயிர்களுக்கு அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப ஆயுளைக் கொடுத்துப் படைக்கின்றான். வெள்ளைத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற சரஸ்வதி தேவியும் அவனோடு சேர்ந்து வந்து உயிர்களுக்கு ஞானத்தை அருளுகின்றாள். ஞானத்தின் தலைவியாக உயிர்களின் நாக்கின் மேல் அமர்ந்த சரஸ்வதி தேவி அருளிய அனைத்தும் ஆணையாக இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    தண்டின் மேல் வளர்ந்து விரிந்திருக்கும் குளிர்ந்த தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன்,

  • வரி 2

    உலகத்தில் வந்து பிறவி எடுக்க வேண்டிய உயிர்களுக்கு அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப ஆயுளைக் கொடுத்துப் படைக்கின்றான்.

  • வரி 3

    வெள்ளைத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற சரஸ்வதி தேவியும் அவனோடு சேர்ந்து வந்து உயிர்களுக்கு ஞானத்தை அருளுகின்றாள்.

  • வரி 4

    ஞானத்தின் தலைவியாக உயிர்களின் நாக்கின் மேல் அமர்ந்த சரஸ்வதி தேவி அருளிய அனைத்தும் ஆணையாக இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1130

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout