திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1129

தொடர்ந்து படிக்கread this section continuously

என்னம்மை யென்னப்ப னென்னுஞ் செருக்கற்றுஉன்னம்மை யூழித் தலைவனு மங்குளன்மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும்பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

உரை

எமது அம்மையாகவும் அப்பனாகவும் இறைவியும் இறைவனுமே இருக்கின்றார்கள் என்கிற பெருமையான எண்ணத்தை நீக்கிவிட்டு, எவர் ஒருவர் இறைவியை நினைத்துத் தியானிக்கின்றார்களோ, அவர்களின் உள்ளுக்குள் தாயாக வந்து வீற்றிருக்கும் இறைவியோடு, பேரூழிக் காலத்தின் தலைவனாகிய இறைவனும் வந்து உடன் வீற்றிருக்கின்றான். இறைவியை நினைப்பவர்களின் மனமே இறைவியாகி, அவர்களின் உலகம் சார்ந்த மாய சிந்தனைகளை மாற்றி உண்மையைச் சொல்லி அருளுகின்றாள். பிறகு அந்த அம்மையே இறைவனோடு சேர்ந்து நின்று குருவாக இருந்து வழிகாட்டுகின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    எமது அம்மையாகவும் அப்பனாகவும் இறைவியும் இறைவனுமே இருக்கின்றார்கள் என்கிற பெருமையான எண்ணத்தை நீக்கிவிட்டு, எவர் ஒருவர் இறைவியை நினைத்துத் தியானிக்கின்றார்களோ,

  • வரி 2

    அவர்களின் உள்ளுக்குள் தாயாக வந்து வீற்றிருக்கும் இறைவியோடு, பேரூழிக் காலத்தின் தலைவனாகிய இறைவனும் வந்து உடன் வீற்றிருக்கின்றான்.

  • வரி 3

    இறைவியை நினைப்பவர்களின் மனமே இறைவியாகி, அவர்களின் உலகம் சார்ந்த மாய சிந்தனைகளை மாற்றி உண்மையைச் சொல்லி அருளுகின்றாள்.

  • வரி 4

    பிறகு அந்த அம்மையே இறைவனோடு சேர்ந்து நின்று குருவாக இருந்து வழிகாட்டுகின்றாள்.

திருமந்திரம் பாடல் #1129

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout