தொடர்ந்து படிக்கread this section continuously
இன்பக் கலவியி லிட்டெழு கின்றதோர்அன்பிற் புகவல்ல னாமெங்க ளப்பனுந்துன்பக் குழம்பிற் துயருறு பாசத்துள்என்பிற் பராசக்தி யென்னம்மை தானே.
உரைmeaning
பாடல் #1127 இல் உள்ளபடி, உண்மையான அன்போடு நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன், அவர்களைப் பேரின்பத்தில் ஆழ்த்தி இருக்கும்படி செய்கின்றான். அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பில் வீற்றிருந்து, ஆருயிர்களின் தந்தையாக இருக்கின்றார். அடியவர்கள் இந்த உலகத்தில் ஆசையினாலும் பாசத்தினாலும் எடுத்த பிறவியில் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தாங்குகின்ற அன்பை அருளுகின்றவளாகப் பரம்பொருளாகிய இறைவியும், அவர்களுக்குள் புகுந்து வீற்றிருந்து ஆருயிர்களின் தாயாக இருக்கின்றாள்.
As in verse 1127, the Lord, who comes and dwells within devotees who love with true devotion, makes them remain immersed in supreme bliss. And, dwelling in the pure love that arises from that bliss, he is the father of every precious life. And the Goddess, who is the Supreme, grants devotees the love that bears the sorrows they undergo in the births they take through desire and attachment in this world, entering and dwelling within them, and so is the mother of every precious life.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1127 இல் உள்ளபடி, உண்மையான அன்போடு நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன், அவர்களைப் பேரின்பத்தில் ஆழ்த்தி இருக்கும்படி செய்கின்றான்.
As in verse 1127, the Lord, who comes and dwells within devotees who love with true devotion, makes them remain immersed in supreme bliss.
- வரி 2Line 2
அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பில் வீற்றிருந்து, ஆருயிர்களின் தந்தையாக இருக்கின்றார்.
And, dwelling in the pure love that arises from that bliss, he is the father of every precious life.
- வரி 3Line 3
அடியவர்கள் இந்த உலகத்தில் ஆசையினாலும் பாசத்தினாலும் எடுத்த பிறவியில் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தாங்குகின்ற அன்பை அருளுகின்றவளாகப் பரம்பொருளாகிய இறைவியும்,
And the Goddess, who is the Supreme, grants devotees the love that bears the sorrows they undergo in the births they take through desire and attachment in this world,
- வரி 4Line 4
அவர்களுக்குள் புகுந்து வீற்றிருந்து ஆருயிர்களின் தாயாக இருக்கின்றாள்.
entering and dwelling within them, and so is the mother of every precious life.
திருமந்திரம் பாடல் #1128





