தொடர்ந்து படிக்கread this section continuously
கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்வம்பிற் றிகழு மணிமுடி வண்ணனும்இன்பக் கலவி யினிதுறை தையலும்அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.
உரைmeaning
பாடல் #1126 இல் உள்ளபடி, அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன், அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனமாகிய கோலின் மூலம் ஆன்மாவாகிய பாகனைக் கொண்டு அடக்கி ஆளுகின்றான். குற்றம் குறையில்லாமல் பிரகாசிக்கும் நவரத்தினங்களால் ஆன கிரீடத்தை அணிந்துகொண்டு, பிரகாசிக்கும் ஒளி வண்ணத்தில் திருமேனியை உடையவன் அந்த இறைவன். அவனோடு பேரின்பத்தில் கலந்து இனிமையாகப் பின்னிப் பிணைந்து வீற்றிருக்கின்றாள் இறைவி. உண்மையான அன்போடு இறைவனை நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் இருவரும் வந்து ஒன்றாக வீற்றிருப்பார்கள்.
As in verse 1126, the Lord, who comes and dwells within devotees, restrains and rules their five senses, using the reins that are their own mind, through the mahout that is the soul, just as an elephant is ruled through its mahout and its goad. That Lord wears a crown made of flawless, shining nine gems, and his sacred form is of a shining, radiant colour. And the Goddess joins with him in supreme bliss and dwells sweetly entwined with him. Both of them come and dwell together within the hearts of devotees who love the Lord with true devotion.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1126 இல் உள்ளபடி, அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன், அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனமாகிய கோலின் மூலம் ஆன்மாவாகிய பாகனைக் கொண்டு அடக்கி ஆளுகின்றான்.
As in verse 1126, the Lord, who comes and dwells within devotees, restrains and rules their five senses, using the reins that are their own mind, through the mahout that is the soul, just as an elephant is ruled through its mahout and its goad.
- வரி 2Line 2
குற்றம் குறையில்லாமல் பிரகாசிக்கும் நவரத்தினங்களால் ஆன கிரீடத்தை அணிந்துகொண்டு, பிரகாசிக்கும் ஒளி வண்ணத்தில் திருமேனியை உடையவன் அந்த இறைவன்.
That Lord wears a crown made of flawless, shining nine gems, and his sacred form is of a shining, radiant colour.
- வரி 3Line 3
அவனோடு பேரின்பத்தில் கலந்து இனிமையாகப் பின்னிப் பிணைந்து வீற்றிருக்கின்றாள் இறைவி.
And the Goddess joins with him in supreme bliss and dwells sweetly entwined with him.
- வரி 4Line 4
உண்மையான அன்போடு இறைவனை நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் இருவரும் வந்து ஒன்றாக வீற்றிருப்பார்கள்.
Both of them come and dwell together within the hearts of devotees who love the Lord with true devotion.
திருமந்திரம் பாடல் #1127





