தொடர்ந்து படிக்கread this section continuously
உணர்ந்தில ரீசனை யூழிசெய் சக்திபுணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னிகொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.
உரைmeaning
பாடல் #1125 இல் உள்ளபடி யாம் உணர்ந்து கொண்ட இறைவனையும், பேரூழிக் காலத்தில் அனைத்தையும் அழிக்கின்ற சக்தியாக இருக்கும் இறைவி அவனோடு சேர்ந்திருப்பதே பரிபூரணமான நிலை என்பதையும், யாரும் உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள். இறைவனை அறிந்துகொண்ட அடியார்களுக்கு அருள் புரிகின்ற இறைவியானவள், இறைவனை அடையும் பூர்வ ஜென்ம புண்ணியம் பெற்றவர்களுக்கு உள்ளே குருவாக இருந்து, அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் அருளிய வழிமுறைகளை மேற்கொண்டு அதன்படியே கடைபிடித்து வருபவர்களை நாடுகின்றாள். அவர்களின் உள்ளே இறைவன் வந்து வீற்றிருப்பான்.
As in verse 1125, no one realizes that the Lord we came to know, and the Goddess, who is the power that destroys everything at the time of the great dissolution, being joined with him, that alone is the state of true fullness. The Goddess, who grants her grace to devotees who have come to know the Lord, dwells within, as guru, for those who bear the merit of past births to attain the Lord, and comes to those who take up the ways she has graciously shown, each fitted to them, and follow them accordingly. And within them the Lord comes and dwells.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1125 இல் உள்ளபடி யாம் உணர்ந்து கொண்ட இறைவனையும், பேரூழிக் காலத்தில் அனைத்தையும் அழிக்கின்ற சக்தியாக இருக்கும் இறைவி அவனோடு சேர்ந்திருப்பதே பரிபூரணமான நிலை என்பதையும், யாரும் உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள்.
As in verse 1125, no one realizes that the Lord we came to know, and the Goddess, who is the power that destroys everything at the time of the great dissolution, being joined with him, that alone is the state of true fullness.
- வரி 2Line 2
இறைவனை அறிந்துகொண்ட அடியார்களுக்கு அருள் புரிகின்ற இறைவியானவள்,
The Goddess, who grants her grace to devotees who have come to know the Lord,
- வரி 3Line 3
இறைவனை அடையும் பூர்வ ஜென்ம புண்ணியம் பெற்றவர்களுக்கு உள்ளே குருவாக இருந்து, அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் அருளிய வழிமுறைகளை மேற்கொண்டு அதன்படியே கடைபிடித்து வருபவர்களை நாடுகின்றாள்.
dwells within, as guru, for those who bear the merit of past births to attain the Lord, and comes to those who take up the ways she has graciously shown, each fitted to them, and follow them accordingly.
- வரி 4Line 4
அவர்களின் உள்ளே இறைவன் வந்து வீற்றிருப்பான்.
And within them the Lord comes and dwells.
திருமந்திரம் பாடல் #1126





