திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1067

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏடங்கை நங்கை யிறைஎங்கண் முக்கண்ணிவேடம் படிகம் விரும்பும்வெண் டாமரைபாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள்சூடுமென் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே.

உரை

பாடல் #1066 இல் உள்ளபடி சிவகதியைச் சொல்கின்ற அனைத்துச் சொற்களாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தியே எங்கள் இறைவியாகும். அவள் மூன்று கண்களை உடையவள். உருவமில்லாத அவளே படிகம் போன்ற ஊடுருவிப் பார்க்கும் திருமேனியை விரும்பி வெள்ளைத் தாமரையில் அமர்ந்து கொண்டு, எப்போதும் வேதங்களை ஓதிக்கொண்டிருக்கும் பிரம்மனின் தேவியான சரஸ்வதியாக இருக்கின்றாள். இவளது திருப்பாதங்களைத் தரிசித்து எமது தலைமேல் தாங்கி, அவளின் தோத்திரங்களை எப்போதும் எமது வாய் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    ஏடு ஏந்திய கையை உடைய நங்கையாகிய எங்கள் இறைவி மூன்று கண்களை உடையவள்.

  • வரி 2

    உருவமில்லாத அவளே படிகம் போன்ற ஊடுருவிப் பார்க்கும் திருமேனியை விரும்பி, வெள்ளைத் தாமரையையும் விரும்புகின்றாள்.

  • வரி 3

    எப்போதும் திருமுறைகளைப் பாடுகின்ற, பிரம்மனின் தேவியாகிய பார்ப்பனியாக இருக்கின்றாள்; அவளுடைய திருப்பாதங்களைத் தரிசித்து,

  • வரி 4

    எமது தலைமேல் தாங்கி, அவளின் தோத்திரங்களை எமது வாய் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

திருமந்திரம் பாடல் #1067

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout