தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றா ளவன்ற னுடலு முயிருமாய்ச்சென்றாள் சிவகதி சேரும் பராசத்திஒன்றாக வென்னுட் புகுந்துணர் வாகியேநின்றாள் பரஞ்சுட ரேடங்கை யாளே.
உரைmeaning
பாடல் #1065 இல் உள்ளபடி மூன்று மண்டலங்களிலும் நிறைந்து நிற்கின்ற திரிபுரை சக்தியானவள் இறைவனோடு ஒன்றாகச் சேர்ந்து எமக்குள் உடலாகவும், உயிராகவும், உணர்வாகவும் இருக்கின்றாள். அதுபோலவே அனைத்து உயிர்களிலும் இருக்கின்றாள். இவள் இறைவனை அடையும் சிவகதிக்கான வழியைக் கொடுக்கும் ஞானத்தின் மொத்த உருவமாகப் பராசக்தி என்னும் பெயருடனும், சிவகதியைச் சொல்கின்ற அனைத்துச் சொற்களாகவும் இருக்கின்றாள். (ஏடங்கை, அதாவது ஏடு ஏந்திய கை, என்பதற்குப் பொருள் எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளாகவும் இருப்பவள் என்பதாகும்.)
As in verse 1065, Tripurai Sakti, who fills and stands in all three spheres, is joined as one with the Lord and is present within us as body, as life, and as awareness. In the same way she is present in every soul. She is the whole form of wisdom that gives the way to reach Sivagati, the Lord, under the name Parasakti, and she is every word that speaks of Sivagati. (Yedangai, that is, the hand that holds the palm leaf, means that she is present as every word that has ever been written or spoken.)
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அவள் இறைவனோடு ஒன்றாகச் சேர்ந்து அவனுடைய உடலாகவும் உயிராகவும் நின்றாள்.
She stood present as his body and as his life,
- வரி 2Line 2
சிவகதியைச் சேர்விக்கின்ற பராசக்தியாகச் சென்றாள்.
and went as Parasakti, the one who leads to and joins Sivagati.
- வரி 3Line 3
எமக்குள் ஒன்றாகப் புகுந்து எமது உணர்வாகவே ஆனாள்.
She entered into me as one, becoming my very awareness,
- வரி 4Line 4
பரஞ்சுடராகவும், ஏடு ஏந்திய கையை உடையவளாகவும், அதாவது எழுதப்பட்ட சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளாகவும் நின்றாள்.
and stood there as the supreme light, she who holds the palm leaf, present as every word that has ever been written or spoken.
திருமந்திரம் பாடல் #1066





